சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - பட்டினத்தார் (பாகம் 2)

பட்டினத்தார் (பாகம் 2) மாரிமைந்தன் சிவராமன் தராசின் இரு தட்டுக்களும் சமமானதும் சிவ சர்மர் தம்பதியினரின் தெய்வக் குழந்தை பட்டினத்தார் தம்பதியினரின் வசமானது. அதே நேரம் தங்கத் தேர் ஒன்று தயங்கியபடி வந்தது. அத்தேர் பட்டினத்தாரின் செல்வச் செழுமையைக் காட்டும் திருத்தேர். சிவ சர்மரும் சுசீலையும் கண்ணீர் மல்க அமர பெரும் செல்வத்துடன் திருவிடைமருதூர் நோக்கிப் பயணமானது. நன்றியோடு சில தூரம் பட்டினத்தார் தொடர்ந்து வர சிவ சர்மர் கைகள் தூக்கி வணங்கி விடை கொடுத்தார். பட்டினத்தார் அரண்மனையில் செல்வச் செழிப்போடு அன்போடு அருளோடு அக்குழந்தை வளர்ந்தது. 'மருதவாணர்' இறை பெயரே குழந்தைக்குச் சூட்டப்பட்டது. இறையே குழந்தை எனில் திரு விளையாடல்களுக்குக் கேட்கவா வேண்டும்! ஒருமுறை மற்ற சிறுவர்கள் சகிதம் மரக்கலப் பயணம். மருதவாணர்தான் தலைமை. நடுக்கடலில் திடுமென எழுந்த திமிங்கலம் ஒரு பையனை 'லபக்' எனப் பிடித்து ‘கபக்' என விழுங்கியது. சிறுவர்கள் துடித்தார்கள். பயந்து நடுங்கினார்கள். ''மருதவாணா... திமிங்கலம்'' எனக் கூக்குரலிட்டார்கள். மருதவாணர் எழுந்தார். திமிங்கலம் படக...