சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - யூகி முனிவர்

யூகி முனிவர் மாரிமைந்தன் சிவராமன் யூகி முனியை அறியும் முன் ஓர் எளிய அறிமுகம். சித்த மருத்துவத்தில் வல்லவர் தேரையர். தேரையரின் குரு அகத்தியர். மருத்துவத் துறையில் அகத்தியரையே விஞ்சியவர் தேரையர். தேரையரின் மனதுக்கினிய சீடரே யூகி முனி. மருத்துவத்தில் மகத்துவம் நிறைந்தவர் என்பதாலேயே தேரையருக்கு யூகியை நிரம்பப் பிடிக்கும். யூகி முனியின் ஆய்வுகள் ஆவணங்கள் சித்த மருத்துவத்தின் பொக்கிஷங்கள். யூகி முனி அருளிய வீர சுண்ணம் என்ற மருத்துவ நூல் ஒப்புயர்வற்றது. யூகியை மெச்சும் தேரையர் ஒருமுறை விரும்பி தனது குரு அகத்தியரிடம் சீடர் யூகியை அறிமுகம் செய்தார். அகத்தியர் பெருமானும் யூகி முனிவரும் மருத்துவ உலகை அலசி மகிழ்ந்தனர். 'வீர சுண்ணம்' நூலை அகத்தியரிடம் வழங்கினார் யூகி முனி தேரையர் முன்னிலையில். சுண்ணம் பற்றி ஆவலாய்க் கேட்டார் அகத்தியர் பெருமான். சுற்றும் முற்றும் பார்த்தபடி தவ வலிமையால் ஆங்கொரு காகத்தை வரவழைத்தார். அக்காகத்தை அருகில் அழைத்தார். தாவித் தாவி காகம் வந்தது. அதனிடம் சுண்ணத்தைத் தந்தார். யூகி. என்னாகும் என அகத்தியர் யோசித்துக் கொண்டிருந்த கணத்தில் சுண்ணத்தை உண்ட கரும் காகம் வெள்ளை...