சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சிவவாக்கியர் (பாகம் 1)

சிவவாக்கியர் பாகம் 1 -மாரிமைந்தன் சிவராமன் சித்த பெருமான்களில் சிறந்தவர் சிவ வாக்கியர். சித்தர்களில் அதிகளவு அதிஞானப் பாடல்களைப் புனைந்தவர் சிவவாக்கியரே. அனல் பறக்கும் சொற்கள் புரட்சிக் கனல் தெறிக்கும் சாடல்கள் சிவ வாக்கியர் சிறப்பைச் சொல்லும். பிறக்கும் போதே 'சிவ சிவ’ என மழலை மொழியில் மயங்க வைத்தவர் என்பதால் சிவவாக்கியர் எனப் பெயர் வந்தது. பேசிய முதல் சொல் 'சிவ' நாமம் என்பதால் சிவவாக்கியர் எனவும் சொல்வர். பாடல்களில் 'சிவ சிவ' என இறைப் பெயரை அதிகம் பதிய வைத்ததால் பரமனின் பெயராய் சிவவாக்கியர் என்றானது என்போரும் உண்டு. சிவனே வாக்கு அளித்ததால் சிவவாக்கியர் எனப் பெயர் வந்தது என்கின்றனர் சிலர். தை மாதம் மக நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் சிம்ம ராசியில் அவதரித்தார் சிங்க நிகர் சிவவாக்கியர். அந்தணர் குலத்தில் தோன்றிய அற்புத மகான் சிவவாக்கியர். தந்தையும் தாயும் வள்ளல் தன்மையில் ஊர் போற்ற வாழ்ந்தவர்கள். மண் சிலை செய்வது அவர்தம் தொழிலாம். பெற்றோர் அறத்தின் பயனாய் அருந்தவத்தின் பலனாய் அவதரித்தவரே சிவவாக்கியர். ஆன்மிகப் பற்றும் தேடல் நிலையும் நிறைய இருந்தது என்பதைத் தவிர சிவவாக்...