சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 1)

போகர் பிரான் (பாகம் 1) -மாரிமைந்தன் சிவராமன் போகர் காலாங்கி நாதரின் முதல் மாணவர். சித்தர்களில் முக்கியமானவர். கொங்கணர் கருவூரார் இடைக்காடர் சட்டைமுனி புலிப்பாணி ஆகியோர் போகருடன் கூடவே பயணித்த சீடர்கள். நந்தீசர் சுந்தரநாதர் மச்சமுனி கமலமுனி திருமாளிகைத் தேவர் ஆகியோரும் போகரின் சீடர்களே என்பாரும் உண்டு. 'மெய்வழி கண்டவர்' என்று திருமூலரால் அவருக்கு ஒப்ப போற்றப்பட்ட பேறு பெற்றவர் போகர் பிரான். மற்றைய சித்தர்களை விட மக்கள் நலனில் மனத்தைச் செலுத்தியவர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வாழ்ந்தவர். சீரிய விஞ்ஞானி. வேதியல் துறையில் வித்தகர். இயந்திரவியலில் முதல் ஞானி. அனைத்துக்கும் மேலாய்த் தமிழ்ச் சித்தர். சீன தேசத்தில் துணி விற்கும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் போகர் பிரான். மழலைக் குழந்தையே ஞானம் பேசியது. சின்னஞ் சிறு வயதில் மந்திரம் சொன்னது. விசித்திரமாய் உபதேசம் செய்தது. ஊரார் வியந்தாலும் தாய் விசனமடைந்தாள். குழந்தைக்குப் புத்தி பேதலித்துவிட்டது என நாளும் அழுதாள். கண்ணீரைத் துடைத்து கண்மணி சொல்வான். "அம்மா... கவலைப்படாதே! நான் மற்றவர் போல் சாதாரணக...