மூர்க்க நாயனார் புராணம்--மாரிமைந்தன் சிவராமன்

 63 நாயன்மார்கள் வரலாறு

மூர்க்க நாயனார் புராணம்

( பாகம் -1)



-மாரிமைந்தன் சிவராமன்

ஆன்றோர் சான்றோர் 
பலரும் வாழ்ந்த
வளம் நிறைந்த நாடு 
தொண்டை வளநாடு.

நாடே 
எப்போதும் மகிழ்ச்சி 
வெள்ளத்தில் மிதக்கும்.
அர்ச்சனைத் திரவியங்கள்
ஆண்டவரையே மயக்கும்.

தடாகங்களில் 
அன்னப்பறவைகள்
நீரினில் மூழ்கியும் நீந்தியும் 
மலர்ந்த தாமரை மலர்கள் மீது ஏறியும் விளையாடும்.

விழா காலங்களில் 
ஆடல் அரங்குகளில் 
தனிக் கொடிகளோடு 
மின்னற்கொடி போன்ற 
மகளிர் ஆடி மகிழ்ந்து 
அனைவரையும் மகிழ்விப்பர்.

சிவாலயங்களில்
சிவலயம் தாண்டவமாடும்.
சிவ தாண்டவத்திற்குத்
துணையாக
சிவனடியார்களின்
பக்திப் பாடல்கள் 
தாளம் போடும்.

தொண்டை வளநாட்டில்
பாலாற்றின் வடகரையில் 
சிவ தொண்டர்களைப்
போற்றி மகிழும்
ஊர் ஒன்று உண்டு.

அவ்வூரின் பெயர் 
திருவேற்காடு.

திருவேற்காட்டில் 
வாய்மை குன்றாத 
தூய்மையுடைய 
வேளாளர் மரபில் 
ஒரு சிவதொண்டர் 
தோன்றினார்.

அவர்
அறிவு தோன்றிய 
நாளிலிருந்து 
திருநீற்றையே 
மெய்ப்பொருள் 
என கருதி வாழ்ந்தார்.

செல்வச் சீமானாய் 
இருந்தும் 
எளியவராகவே வாழ்ந்தார்.

உள்ளம் முழுதும் 
அன்பும் கருணையுமே 
நிரம்பி இருந்தன.
சிந்தனை எண்ணம் செயல்
மூன்றிலும் சிவனே
நிறைந்திருந்தார்.

அன்பே சிவம் 
என்பதே அவரது 
வாழ்க்கை முறையாய்
அமைந்து போனது.

சிறு பிராயத்திலேயே 
சிவத் தொண்டில் 
ஈடுபாடு கொண்டு 
சிவனடியார்களுக்கு 
அமுது படைத்தும் 
வேண்டுவன வழங்கியும் 
வழி அனுப்புவது 
அவரது அன்றாட 
நிகழ்ச்சி நிரலாயிருந்தது.

அவர் உபசரிப்பும் 
சிவபணியும் 
நாளடைவில் 
சுற்றுவட்டாரத்தில் 
ஒரே பேசுபொருளாக 
மாறிப் போகவே 
சிவனடியார்களின் 
வருகை
நாளொரு மேனியும் 
பொழுதொரு வண்ணமுமாய்
கூடுதலாகிக் கொண்டு இருந்தது.

மனமும் கைகளும் 
சலிக்காது வாரி இறைத்தார் 
முழு செல்வத்தையும்.

ஆற்றில் போட்டாலும் 
அளந்து போடும் 
சாதாரண அறம் 
அவருக்கு இல்லாததால் 
நாளடைவில் நலிந்து 
நடுவீதிக்கு வந்து விட்டார்.

அப்போதும் 
அவர் மனமும் செயலும் 
மகேஸ்வர பூஜையைச்
சுற்றிச் சுற்றி வந்தது.

வரவு என்று 
ஏதுமில்லாமல் 
வாரி இறைத்து 
சிவபணி செய்வது 
எங்ஙனம் சாத்தியம் ?

மனம் நொந்து போனார்.
பொருளீட்டப் 
பல வழிகள் தேடினார்.
ஏதும் பலன் அளிக்கவில்லை.

சிறு வயதில் 
கல்வி கற்காமல் 
காடு கழனி என்று 
உழைத்து வந்ததால் 
புதிய வருமானத்திற்கு 
உத்தி புலப்படவில்லை.
இறையிடம் 
கண்ணீர் மல்க 
மன்றாடினார்.

அவரது 
சிவபக்தியிலும் 
சிவனடியார் தொண்டிலும் மெய்சிலிர்த்திருந்த
மெய்கண்டர் 
அவருடன் விளையாடிப் 
பார்க்கலாம் என்று
ஒரு வழியை 
அவர் மனதில் 
உதிக்கச் செய்தார்.

அது 
அவர் சிறு வயதில் 
விளையாட்டாக கற்றிருந்த 
சூது விளையாட்டு.

ஆடலரசன் 
சிவபணிக்கு ஆதரவாய் 
ஆடச் சொன்னது சூதாட்டம்.
சொந்த ஊரான 
திருவேற்காட்டில் சூதாடுவதில் விருப்பம் காட்ட வில்லை பலர்.

பக்கத்து ஊர் சென்றார்.
பல தனவான்கள் சூதாட 
விரும்பி வந்தார்கள்.

திருவிளையாடல் 
நாயகனின்
திருவடியைத் 
தொழுது வணங்கி
சூதாட்டத்தில் 
வெற்றி பெற்று 
நிறைய பொற்காசுகள் 
குவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து விட்டு விளையாடுவார்.

வெற்றி 
அவருக்கே கிட்டும்.
கருணைக் கடலின் 
கடைக்கண் பார்வை தான் 
அவருக்கு இருக்கிறதே !

பெற்ற 
பொற்காசுகளை கொண்டு 
அங்கு இருக்கும் 
சமையல்காரரை அழைத்து அறுசுவை உணவு 
தயாரிக்கப் பணித்து 
அகமகிழ்வோடு 
சிவனடியார்களுக்கு 
அமுது படைப்பார்.

அவர்கள் 
உணவருந்துவதை 
ரசித்து மகிழ்ந்து 
கடைசிப் பந்தியில் 
கடைசி ஆளாக 
சிறிதே உண்பார்.
ஒவ்வொரு நாளும் 
ஒவ்வொரு ஊர். 
ஒவ்வொரு சிவதலம்.
அதிகாலை நீராடுவார்.
பக்தியோடு இறை நாமம் 
துதிப்பார்.
கோயில் சென்று 
இறைவனை வேண்டுவார்.

" இறைவா....! 
இன்றைய சூதாட்டத்தில் 
நிறைய பொற்காசுகள் 
கிடைக்கச் செய்.
நிறைய பேருக்கு 
நிறைய நாட்கள்
அன்னதானம் செய்ய 
என்னை உன் கருவியாக்கு "
என உரிமையோடு 
வேண்டி விட்டே
விளையாடச் செல்வார்.

சூது விளையாட்டில்
யாரேனும் 
பிழை செய்தாலோ 
ஏமாற்ற முற்பட்டாலோ 
சிவபணிக்கு அவர் குந்தகம் விளைவித்து விட்டதாக
நினைத்து 
பெருஞ்சினம் கொள்வார்.

கோபம் கொப்பளிக்க
அவர் மேல் சீறிப்பாய்ந்து 
இடையில் இருக்கும் 
சிறு குறுவாளினைக் கொண்டு 
குத்த முற்படுவார்.

இதனால் 
அவரைச் சக சூதாடிகள் 
மூர்க்கன் என்றனர்.
பொல்லாதவன் என 
புறம் பேசினர்.

அவரது 
வழித்தடத்தில் 
ஒரு நாள் 
கும்பகோணம் 
வழிமறித்தது.

வழக்கம்போல் 
தூய நீராடி 
இறைவனைச் சரணடைந்து சூதாட்டத்தில் 
ஜெயக்கொடி 
நாட்ட வேண்டும் என்று
பிரார்த்தித்து விட்டு 
சூதாட்டக் களத்தில் இறங்கினார்.

அன்று ஏனோ 
திருக்குடம்பேஸ்சுவரர்
பொற்காசுகளை
மலை போல் 
குவியச் செய்தார்.

இது போதும் 
என்ற மனதோடு 
பல மாதங்களுக்கு சிவனடியார்களுக்கு 
போதும் போதும் என 
திருப்தியுறும் வண்ணம் 
அறுசுவை உணவு படைத்து வணங்கி மகிழ்ந்தார்.

அப்போது
எல்லாம் வல்ல சிவபிரான் எல்லையில்லா கருணையோடு தனது தொண்டருக்குச்
சிவபுண்ணியம் தர 
விருப்பம் கொண்டார்.

தன் விளையாட்டை 
நிறுத்திக் கொண்டு .
சூதாட்டம் ஆடியவரை 
உலகம் பாராட்டி வணங்க
வழிவகை புரிந்தார்.

அவர் சூதாடி
செய்த பாதகத்தை
நற் பிழைகளாக 
அருள் மாற்றம் செய்து அரவணைத்துக் கொண்டார்.

சூதுவாது அறியாது
சூதில் ஈடுபட்ட
சிவத் தொண்டருக்கு 
வேற என்ன வேண்டும்?
அப்போது
பூதகணங்கள் சூழ்ந்து 
இசை பாட
தேவாதி தேவர்கள் 
வாழ்த்திசைத்து 
பூமாரிப் பொழிய
ஆண்டவத் தாண்டவமாடும்
ஆதிஅந்த அருள் வடிவானவர்
சிவதொண்டருக்கு
காட்சியளித்து
பெருமிதத்துடன்
சிவபுரிக்கு
அழைத்துச் சென்று
அருகிருக்கும்
நாயனாராக்கிக் கொண்டார்.

அத்தொண்டரே 
மூர்க்க நாயனார் 
பொல்லாத நாயனார் 
என காரணப் பெயர் பெற்றார்.

ஒரு நாற்காரியத்திற்காக 
சிவ புண்ணியத்திற்காக
சூதாடியவரைக் கூட
சூட்சமமாய் தன்னுடன் சேர்த்துக்கொண்டார் மாதொருபாகன்.

அவர் ஆட வைத்ததால்
இவர் ஆடியதால்
அச்சூது கூட
நற்சூது எனப் 
பெயர் பெற்றது.

பெரிய புராணம் 
அருளிய
தெய்வச் சேக்கிழார்
மூர்க்க நாயனாரை
நற்சூதர் என்று
பாராட்டு பத்திரம் 
வழங்கிப் போற்றுகின்றார்.

சூதில் நற்சூது 
என்று ஒன்று இருக்குமா ?
நெற்றிக்கண் திறப்பினும் 
குற்றம் குற்றம் தானே??

போன்ற பல கேள்விகள் 
அடியேனைப் போல 
பலருக்கும் எழுந்திருக்கும்.

விடை தேடி 
நம்பெருமானின்
நற்சீடரான
நந்தீஸ்வரரை நாடினேன்.

கரூரில் குடிகொண்டிருக்கும்
சித்தகுருஜி வாசிக்கும்
நந்தி ஜீவநாடியை 
பரிந்துரைத்தார்.
பரமனின் பாங்கான
மெய்க்காப்பாளர்.

நந்தீஸ்வரர் பெருமானே
ஜீவநாடியில் குரல் கொடுத்து
கரும்புக் கவி வடிவில்
மூர்க்கநாயனார் புராணத்தை
முற்றிலும் மாற்றிச் சொன்னார்.

வியப்பாய் இருந்தது.
சித்தகுருஜியிடம் 
விளக்கம் கேட்டேன்.

பெரிய புராண காலத்தில் 
இந்தளவு போதும் என்று
ஞானச் சேக்கிழாருக்கு
ஞான பண்டிதரான
சிவபெருமான்
அவ்விதம் அருளியிருப்பார்.

'இப்போது 
நந்தீஸ்வரரே வெளிப்பட்டு 
இக்கால ஓட்டத்தைக்
கணக்கில் கொண்டு
முழுப் புராணத்தையும்
வெளிப்படுத்தி உள்ளார்'
என்ற மென்மையான
பதில் கிடைத்தது.

நந்தீஸ்வரர் நவின்ற
நற்சூதர் நாயனார் புராணம்
அற்றார் அழிபசி தீர்த்தலின்
அளவில்லா புண்ணியத்தை
அற்புதமாய் விளக்கும்
ஆன்மீகக் களஞ்சியம்.

இதனால்
இறைவனின் 
மகத்துவம் 
இன்னும் புரிந்தது.

முக்காலம் 
உணர்ந்தவனின் 
அக்கால 
விளையாடல்களின் 
இறை சூட்சமங்கள் புரிந்து
இக்காலம் தெளியவேண்டிய
மூர்க்க புராணம் 
புரியவந்தது .

நந்தீஸ்வர பெருமான்
நந்தி ஜீவநாடி மூலம்
அருளியிருக்கும்
மூர்க்க நாயகனார் புராணம்
சிவபதம் பற்றி
முக்தி அடைய 
விரும்புவோர்க்கான  
சூத்திரங்கள் கொண்டது.
சூட்சமங்கள் நிறைந்தது.

அது ...........

(மூர்க்க நாயனார் புராணம் தொடரும்)

கருத்துகள்

  1. ஓம் நமச்சிவாய . சித்தர்களின் வாழ்க்கை வரலாறு அனைவருக்கும் எளிய முறையில் சென்றடைய தாங்கள் எடுத்துள்ள முயற்சிக்கு வாழ்த்துக்களும் , நன்றிகளும்

    பதிலளிநீக்கு
  2. உன்னதமான இந்த சேவை சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் நமசிவாய. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. நன்றி நன்றி மிக்க நன்றி திரு.சிவராமன் ஐயாவின் அற்புதமான பதிவு மெய் சிலிர்க்க வைக்குது.சிவனன்றி ஓர் அணுவும் அசையாது நடப்பது எல்லாமே நன்மைக்கே என உணர முடிகிறது. வாழ்க தங்களின் அற்புத பயணம் தொடரட்டும் சித்தர் பெருமைகள் பற்றிய தேடுதல் என்றென்றும் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹



    வும் அசையாது

    நடப்பதும் எல்லாம் நன்மைக்கே
    சிவமே

    பதிலளிநீக்கு
  4. அருமை கடவுள் ஒரு சிலரிடம் தான் இந்த பணி செய் என்று தோன்ற செய்வார்... அதில் நீங்களும் தெய்வ குழந்தை யாக மாறி டிங்க வாழ்த்துக்கள் sir 💐💐

    பதிலளிநீக்கு
  5. உங்கள் அன்மிகசேவை தோடர்ந்து வளர குருவருளும்திருவருளும் உங்களை வழி நடத்த பிறத்திக்கிறேன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)