சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - மச்சேந்திரரர்-கோரக்கர்-பிரம்மமுனி (பாகம் 2)

மச்சேந்திரர்-கோரக்கர்-பிரம்மமுனி (பாகம் 2) மாரிமைந்தன் சிவராமன் பிரம்மமுனி கோரக்கரின் இதய நண்பர். இருவருக்கும் இருந்த கருத்தொற்றுமை சித்தர் உலகம் சந்தித்திராதது. வரத மேடு என்ற காட்டுப் பகுதியே அவர்களின் அப்போதைய வாசஸ்தலம். இருவருக்கும் ஒரு யோசனை வந்தது. 'சித்திகள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாய்க் கூடி வருகிறது. அடுத்து... பாக்கியிருப்பது தெய்வ நிலை ஒன்றே. படைத்தல் காத்தல் மறைத்தல் ஒடுக்கல் அருளல் என்னும் ஐந்தொழிலே இனி சித்தியாக வேண்டும். அதற்கு ஒரே வழி யாகம். யாகம் செய்வோம்.' தெய்வமாதல் என்பது எளிய விஷயமா? குறைகள் எதுவும் இன்றி முறைப்படி யாகம் நடந்தது. யாக குண்டத்தில் எழுந்த புகை யோகம் தர எத்தனித்தது. அதற்கு இறைவனின் கருணை அவசியமன்றோ! கோரக்கர் பிரம்மமுனியின் யாகக் கூட்டணியில் மனத்தூய்மை இருந்தது. யாகப் பொருட்களில் கூட தூய்மை இருந்தது. ஆனால் யாகத்தின் நோக்கத்தில் தூய்மை இல்லை. இறைவன் போல் ஆகவேண்டும் என்பது இறுதி நிலை. பேராசைப் பெருநிலை! அதற்கு இவை போதாது. இறைவனே விரும்ப மாட்டார். பொதுவாக யாகம் தடைப்பட தடைகள் தேடி வரும். வந்தது. யாகத் தீயிலிருந்து இரண்டு ப...