சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - மச்சேந்திரரர்-கோரக்கர்-பிரம்மமுனி (பாகம் 2)
மச்சேந்திரர்-கோரக்கர்-பிரம்மமுனி
(பாகம் 2)
மாரிமைந்தன் சிவராமன்
பிரம்மமுனி
கோரக்கரின்
இதய நண்பர்.
இருவருக்கும்
இருந்த
கருத்தொற்றுமை
சித்தர் உலகம்
சந்தித்திராதது.
வரத மேடு
என்ற
காட்டுப் பகுதியே
அவர்களின்
அப்போதைய
வாசஸ்தலம்.
இருவருக்கும்
ஒரு
யோசனை வந்தது.
'சித்திகள்
யாவும்
ஒன்றன் பின்
ஒன்றாய்க்
கூடி வருகிறது.
அடுத்து...
பாக்கியிருப்பது
தெய்வ நிலை
ஒன்றே.
படைத்தல்
காத்தல்
மறைத்தல்
ஒடுக்கல்
அருளல்
என்னும்
ஐந்தொழிலே
இனி
சித்தியாக வேண்டும்.
அதற்கு
ஒரே வழி
யாகம்.
யாகம்
செய்வோம்.'
தெய்வமாதல்
என்பது
எளிய விஷயமா?
குறைகள்
எதுவும் இன்றி
முறைப்படி
யாகம்
நடந்தது.
யாக குண்டத்தில்
எழுந்த புகை
யோகம் தர
எத்தனித்தது.
அதற்கு
இறைவனின்
கருணை
அவசியமன்றோ!
கோரக்கர்
பிரம்மமுனியின்
யாகக்
கூட்டணியில்
மனத்தூய்மை
இருந்தது.
யாகப் பொருட்களில்
கூட
தூய்மை இருந்தது.
ஆனால்
யாகத்தின் நோக்கத்தில்
தூய்மை இல்லை.
இறைவன் போல்
ஆகவேண்டும்
என்பது
இறுதி நிலை.
பேராசைப்
பெருநிலை!
அதற்கு
இவை
போதாது.
இறைவனே
விரும்ப மாட்டார்.
பொதுவாக
யாகம் தடைப்பட
தடைகள் தேடி வரும்.
வந்தது.
யாகத் தீயிலிருந்து
இரண்டு
பெண்கள்
வெளி வந்தனர்.
ரம்பையும்
ஊர்வசியும்
பொறாமைப்படும்
பேரழகுப் பெட்டகங்கள்.
யாகத்தில்
குறியாயிருந்த
கோரக்கரும்
பிரம்மமுனியும்
சினந்தனர்.
"யார் நீங்கள்?"
கோபக் கனல்
தெறித்தது.
அப்பெண்கள்
அசரவில்லை.
"நாங்கள்
இருவரும்
தேவலோகப்
பெண்கள்.
உங்கள்
யாக சக்தியால்
மதி மயங்கி
வந்துள்ளோம்.
உங்களை
மயக்க
வரவில்லை.
மணம் புரிய
வந்துள்ளோம்."
இரு முனிவர்களும்
பதில் சொல்லத்
திணறும்
தருணத்தில்
அக்னியும்
வருணனும்
அங்கு
வந்தார்கள்.
கண்ணால்
பேசும்
இரு
கன்னிகளையும்
பார்த்த மாத்திரத்தில்
கிறங்கிப் போனார்கள்.
'தேவலோகத்தில் கூட
இப்படி அழகு
இல்லை.
அழகியர்
இல்லை.'
அவர்கள்
மனது
கூச்சலிட்டது.
வந்த
வனிதைகள்
யாகம் செய்யும்
முனிவர்களை
விரும்ப
அந்த யோகம்
தங்களுக்குக்
கிடைக்காதா
என
தேவமார்கள்
இருவரும்
ஏங்கினர்.
'மானிடர்
தேவர்
எவரது
சித்தமும்
கலங்க
வைப்பவர்
அழகுப்
பெண்கள்.
பெண்களைத்
தேடுவதில்
நாடுவதில்
உயர்ந்தோரும்
உளுத்தவர்தாம்
போலிருக்கிறது.'
கோரக்கர்
சிந்தையில்
தாண்டவமாடிய
இந்த சிந்தனை
பிரம்மமுனியின்
சிந்தனையில்
கோரத் தாண்டவமே
ஆடி ஓய்ந்தது.
ஆடிய
தாண்டவம்
சில நேரம்
கனத்த
அமைதியை
நிறுத்தியது.
மந்திரங்கள்
நிற்கவே
யாகம்
தடைப்பட்டது.
கோரக்கருக்கும்
பிரம்மமுனிக்கும்
யாகம்
தடைப்பட்டது
எல்லையில்லாக்
கோபத்தை
மூட்டியது.
சாபமாய்
வார்த்தைகள்
சிதறி விழுந்தன.
கமண்டலத்தை
எடுத்தவர்கள்
அவ்வழகிய
பெண்கள் மீது
நீரைத்
தெளித்தனர்.
அவர்களுக்கென்ன?
யாகம் தடைப்பட
திட்டமிட்டு
வந்தவர்கள்
யாகம் நின்ற
திருப்தியில்
நீர் பட்டதும்
செடிகளாகச்
செழித்தனர்.
ஏக்கமுடன்
நின்றிருந்த
அக்னியும்
வருணனும்
துக்கமுடன்
திரும்பிச்
செல்ல
மனமில்லாது
காமத்துடன்
செடிகளோடு
கலந்தனர்.
தீயாக!
நீராக!!
பிரம்மமுனிவரது
சாபத்தால்
உண்டான
செடியே
'பிரம்ம பத்திரம்’
எனும்
புகையிலை.
கோரக்கரின்
கோபத்தால்
உருவிழந்து
செடியானதே
கோரக்கர் மூலிகை
எனும்
கஞ்சா.
புகையிலை
கஞ்சா
இரண்டுக்கும்
நீரும் நெருப்பும்
அடிப்படைத்
தேவை.
அவையே
அக்னியும்
வருணனும்.
இவை யாவும்
சில நொடிகளில்
படபடவென
நிறைவேறி
நின்றன.
யதார்த்த நிலை
வந்த போது
கோரக்கரும்
பிரம்மமுனியும்
தம் நிலை
அறிந்து
துடித்துப் போனார்கள்.
பெண்களுக்கு
சாபம் விட்டது
பாவம்
எனச் சஞ்சலப்பட்டார்கள்.
பெண்களுக்குச்
சாபம் தந்தால்
இருந்த
சித்திகளும்
விட்டுப் போயிருக்க
உள்ளதும் போச்சே
என
உருகிப் புலம்பினர்.
சர்வேஸ்வரன்
அதுபோது
சக்தி தேவியுடன்
ரிஷப வாகனத்தில்
தோன்றினார்.
"பதவி ஆசை
வேண்டாம்
சித்தர்களே...!
அதுவும்
ஆண்டவன்
பதவி?
அது
அதீத
ஆசை.
உங்கள்
தவத்திற்கு
இப்போதும்
பலனிருக்கும்.
கவலை வேண்டாம்.
நீங்கள்
உருவாக்கிய
மூலிகைகள்
காய கல்பத்திற்கு
உதவும்
மூலிகைகளாக
அமையும்."
இறைவன்
இவ்விதம்
அருளிவிட்டு
மறைந்து
போனார்.
இன்றும்
சித்த மருத்துவத்திற்கும்
காய கல்பத்திற்கும்
கஞ்சாவும்
புகையிலையும்
பின்னணியில்
இருக்கும்
ரகசியம் இதுவே.
கோரக்கரோடு
வசிட்டர்
துர்வாசர்
காலாங்கிநாதர்
இடைக்காடர்
தன்வந்திரி
கருவூரார்
கமலமுனி
சட்டைமுனி
போன்றோரும்
பொதிகை மலையில்
ஞான நெறியில்
சிறந்து வந்தனர்.
இதே
காலகட்டத்தில்தான்
இமயமலையும்
சித்தர்கள்
இருப்பால்
சிறந்து இருந்தது.
அகத்தியர்
திருமூலர்
விசுவாமித்திரர்
போகர்
புலிப்பாணி
குதம்பைச்சித்தர்
என்று
சித்தர் கூட்டம்
இமயமலையைப்
பெருமைப்படுத்திக்
கொண்டிருந்தது.
அதுசமயம்
அகத்தியருக்கு
ஓர் ஆசை.
காலாங்கிநாதரைக்
கொண்டு
பெருவேள்வி ஒன்றை
கங்கை நதிக் கரையில்
சந்திர புஷ்கரணி
என்ற
தீர்த்தக் கரையில்
அன்னை
ராஜராஜேஸ்வரிக்கு
நடத்த
விருப்பம் கொண்டார்.
பொதிகை
வாழ்
காலாங்கிநாதரை
அகத்தியர் பெருமான்
அன்போடு அழைத்தார்.
அகம் மகிழ்ந்து
காலாங்கிநாதர்
அகம் நிறைந்த
96 சீடர்களோடு
கங்கைக் கரைக்குப்
பயணப்பட்டார்.
போகும் முன்
பொதிகை மலையில்
இருக்கப் போகும்
சீடர்களை
அழைத்து
45 நாட்களில்
திரும்பி வருவதாகவும்
அதுவரை
தன்னுடலைப்
பாதுகாக்கச் சொல்லி
ஆணையிட்டும்
உடலை
உகுத்துவிட்டுப்
புறப்பட்டார்.
சீடர்கள்
மிகுந்த
கவனத்துடன்
குருநாதர்
உடலைப்
பாதுகாத்து
வந்தனர்.
ஆனால்
45 நாட்களில்
குருநாதர்
திரும்பவில்லை.
கங்கைக்குப்
போனவர்
அகத்தியர்
போகர்
முதலான
சித்தர் பிரான்களுடன்
வேள்வியில்
திளைத்திருந்தார்.
பின்
அதே ஆனந்தத்தோடு
அவர்களோடு
இமயமலை
சென்றுவிட்டார்.
காலம்
நீடித்ததால்
காலாங்கிநாதர்
காலமாகிவிட்டார்
என
குருநாதர்
உடலை
எரியூட்ட
முயன்றனர்
சீடர்கள்.
கோரக்கர்
தடுத்துப்
பார்த்தார்.
எவ்வளவு
சொல்லியும்
கேட்க
மறுத்தனர்.
காலாங்கியார்
காலம் கடந்தவர்.
சாகாக்கலை
பயின்றவர்.
இமயமலையில்
உயிரோடு இருக்கிறார்
என கோரக்கர்
தவ ஆற்றலால்
அறிந்து கூறியும்
சீடர்கள்
எரியூட்டுவதிலேயே
அக்கறை காட்டினர்.
வந்ததே கோபம்
கோரக்கருக்கு.
அத்தனை
சீடர்களையும்
அடிக்கத் தொடங்கினார்.
நையப் புடைத்தார்.
காலாங்கிநாதரைக்
கையோடு
அழைத்து வருவேன்
எனச்
சொல்லி
விண்ணில் பறந்தார்
இராஜாளிப் பறவையாக!
இமயமலை.
அங்கே
அகத்தியர்
காலாங்கி
போகர்
சகிதம்
சித்தர்
சத்சங்கம்.
கோரக்கர்
பொதிகையில்
நடந்த
அமளியைச்
சொன்னார்.
யாரிவர்
என்ற
கேள்வி
எழுந்தது.
கோரக்கர்
என்று
காலாங்கிநாதர்
கோரக்கர்
பற்றி
பெருங் குறிப்பு
தந்தார்.
காலாங்கியின்
அத்யந்த சீடர்
போகர்.
உடனே
கோரக்கரின்
கை பிடித்தார்.
"என்
குருநாதரின்
உயிர் காத்த
நீவிர்
இனி என்
உயிர் நண்பர்."
கை குலுக்கலில்
உறுதி இருந்தது.
இறுக்கம் இருந்தது.
கோரக்கருக்கு
அது ஒரு
ராசி.
குரு
மச்சேந்திரர்
ஆகட்டும்
தோழரான
பிரம்மமுனி
ஆகட்டும்
இப்போது
போகர்
ஆகட்டும்
கோரக்கரின்
நெருக்கத்தில்
இருந்தனர்.
அன்பு
உருக்கத்தில்
திளைத்தனர்.
உயிர்
நண்பர்கள்
சூழ இருப்பது
ஒரு
கொடுப்பினை.
இமயமலையை
விட்டு
காலாங்கிநாதர்
கிளம்பினார்.
புது நண்பர்கள்
போகரும்
கோரக்கரும்
புதிய
பயணத்திட்டமொன்று
போட்டனர்.
காலாங்கிநாதரிடம்
போகரும்
மச்சேந்திரரிடம்
கோரக்கரும்
ஆசி பெற்று
விடை பெற்றனர்.
அது
விண்வெளிப்
பயணம்.
வான் வழிப்
பயணம்.
போகரும்
கோரக்கரும்
பேசிப் பேசி
மகிழ்ந்தனர்.
மண்ணுலகம்
திரும்பியபோது
போகர் வசமிருந்த
குளிகை
தவறி
பூமியில் விழுந்தது.
விண்ணில்
பறக்க உதவும்
குளிகை.
போகர்
இறைவி
ராஜராஜேஸ்வரியைத்
தியானித்தார்.
திருநாகைக்காரோணம்
அருகே
கடம்பர் வனத்தில்
அம்மன் சன்னதியில்
குளிகை கிடப்பதாகக்
காட்சி தெரிந்தது.
இரு முனிகளும்
அங்கே
போனார்கள்.
குளிகை
இருந்தது.
எடுக்கத்தான்
முடியவில்லை.
அன்னையின்
குரல்
அசரீரியாக
ஒலித்தது.
"சித்தர்களே!
அருகே
தென்காரோணம்
என்ற
ஊர் உள்ளது.
அங்கே
பால்மொழிஅம்மை
திருத்கோயில்
உள்ளது.
அவளோடு
உறைந்திருக்கும்
நல்லூர் நாதனார்
அற்புதமானவர்.
அவரை வேண்டின்
குளிகையை
எடுத்துச் செல்லும்
வரம் கிடைக்கும்."
அசசீரி கேட்டு
மெய்சிலிர்த்த
சித்தர்கள் இருவரும்
அக்கோயிலுக்குச்
சென்று
வழிபட்டனர்.
இறைவன்
இசைவு தர
குளிகையை
எடுத்து
பயணம்
தொடர்ந்தனர்.
இரு
சித்தர்களையும்
அழைத்து
அருள்பாலித்த
நல்லூர் நாதர்
திருத்தலமே
வடக்குப் பொய்கைநல்லூர்.
இருவரும்
இறை ஆசியோடு
பொதிகை மலை
வந்தடைந்தனர்.
பொதிகை மலையில்
போகர்
இருந்த காலம்
பொற்காலம்.
சில காலம்
கழித்து
ஒருநாள்
போகர்
கோரக்கரிடம்
விடைபெற்றார்.
சீன தேசம்
சென்றார்.
அங்கு
500
ஆண்டுகள்
இருந்தார்.
நீண்ட காலம்
நண்பரைக்
காணாத
நட்பின்
ஏக்கத்தால்
போகரைக்
காண
கோரக்கர்
சீனா
பயணப்பட்டார்.
வழித்
துணைக்கு
புலிப்பாணியை
அழைத்துக்
கொண்டார்.
சீன தேசத்தில்
சித்துகள்
புரிந்தார்.
போகரைக்
கண்டு
மகிழ்ந்தார்.
இப்படிப் போயின
பல்லாண்டுகள்.
ஒரு நல்ல
நாளில்
மூவரும்
திரும்பினர்
தாய் நாட்டிற்கு.
இமயமலையில்
புலிப்பாணியை
இருக்கச்
சொல்லிவிட்டு
மீண்டும் ஒரு
சித்த பயணத்திற்கு
ஆயத்தமாயினர்
நண்பர்கள் இருவரும்.
காசி
காஞ்சிபுரம்
சிதம்பரம்
திருவாவினன்குடி
என
இருந்தது
அவர்கள்
சுற்றுலா.
அதுபோதுதான்
சிதம்பரத்தில்
43 கோணத்தில்
51 எழுத்துக்களை
இட்டு நிரப்பி
ஒரு யந்திரத்தை
உருவாக்கி
அதை
தில்லைப் பெருமானின்
வலப்பாகம் ஆக்கினர்
வல்லப சித்தர்கள்
இருவரும்.
அதுவே
இன்றைய
சிதம்பர ரகசியம்!
போகர்
பழனியில்
தங்க விரும்பவே
கோரக்கர்
விடை பெற்றார்.
பழனியில்
தங்கிய காலத்தில்
புலிப்பாணியுடன்
போகர்
உருவாக்கித் தந்ததே
பழனி
தண்டாயுதபாணியின்
நவபாஷாணத்
திருமேனி.
கோரக்கரின்
மனதில்
போகருடன்
சென்று வந்த
வடக்குப் பொய்கைநல்லூர்
நிறைந்து இருந்தது.
அங்கு
மூன்று பௌர்ணமி
காலம்
பெரும் வேள்வி
நிகழ்த்த
சித்தம் கொண்டார்.
வழியில்
திருவாரூர்.
திருவாரூரான்
தியாகராஜப் பெருமானைத்
தரிசிக்கப் போனார்.
தரிசித்தார்.
அங்கே
முசுகுந்த சக்கரவர்த்தி
காத்திருந்தார்.
பொய்கைநல்லூர்
வேள்வி பற்றிச்
சொல்லி
சக்கரவர்த்தியை
உடனிருந்து
உதவச்
சொன்னார்.
"உத்தரவு"
என்ற வார்த்தை
முசுகுந்த
சக்கரவர்த்தியிடமிருந்து
பணிவுடன் வந்தது.
நந்தி நல்லூரில்
வேள்வி
தொடங்கியது.
நந்தி நல்லூர்...
அதுவும்
வடக்குப்
பொய்கை நல்லூரின்
இன்னொரு பெயரே.
வேள்வி
சிறக்க
இறைவனை
வேண்டி நின்றபோது
புஜண்டரைத்
தரிசித்து
ஆசி பெற
ஆணையிட்டது
ஓர் அசரீரி.
கோரக்கர்
தவத்தில்
அமர்ந்தார்.
கண் விழித்தபோது
எதிரே
காகபுஜண்டர்.
அவரது
ஆசி
உடனே கிடைத்தது.
கோயிலிருக்கும்
ஆசிரமத்தின்
அதிபதி
புஜண்டர்.
காலம் கடந்த
மூத்த சித்தர்.
அவரின் அருளாசி
கோரக்கருக்குக்
கிடைத்தது.
வேள்வி
வெற்றி கண்டது.
பொதிகை மலைக்குப்
புறப்பட்டார்.
போகர்.
அப்போது
அவர் மனத்திற்குள்
ஓர் அசரீரி
மானசீகமாய்
ஒலித்தது.
'இந்த இடத்திற்கு
மீண்டும்
வருவாய்.
இங்கேயே
நிரந்தரமாய்த்
தங்கி விடுவாய்.’
சதுரகிரி
எண்ணிலாக் கோடி
சித்தர் பிரான்களின்
வாசஸ்தலம்.
கோரக்கரின்
தவக் குகை
சதுரகிரியின்
ஆன்மிக அருமை
சொல்லும்.
சதுரகிரியில்
ஏறக்குறைய
எல்லாச் சித்தர்களின்
ஆசிரமத்திலும்
தங்கியிருந்தவர்
கோரக்கர்.
அந்தக் கதை
சுவாரஸ்யமானது.
இணை பிரியாதிருந்து
தோழர்
பிரம்மமுனியுடன்
யாகம்
நடத்தி
கஞ்சாவையும்
புகையிலையையும்
உலகுக்கும்
சித்த மருத்துவத்திற்கும்
உருவாக்கி
வழங்கிய பின்னர்
ஒரு காலகட்டத்தில்
இருவரும்
தனி வழி கண்டனர்.
கோரக்கர்
வனத்தில்
வலம் வந்து
கொண்டிருந்தார்.
ஓரிடத்தில்
இடையன் ஒருவனைப்
பாம்பு தீண்ட
அவன்
மாண்டிருந்தான்.
கொஞ்ச தூரத்தில்
அவன்
காதல் மனைவி
உணவுடன்
அவனுக்காகக்
காத்திருந்தாள்.
இரண்டையும்
கண்ட
கோரக்கர்
பெண்ணிடம்
இரக்கம் கொண்டார்.
ஏற்கனவே
யாக குண்டத்தில்
வந்த
பெண்களைச்
சபித்து
பாவம்
செய்ததற்குப்
பரிகாரம்
செய்ய
உறுதி பூண்டார்.
மாண்டிருந்த
இடையனின்
உடலில்
புகுந்தார்.
மாண்ட இடையன்
மீண்டான்.
அது முன்
தன் உடலை
குகை ஒன்றில்
ஒளித்து வைத்திருந்தார்.
வேட்டைக்கு
வந்த
மன்னன் ஒருவன்
உடலைப் பார்த்து
அனாதைப் பிணம்
என நினைத்து
எரித்துச் சென்றான்.
இடைச்சியுடன்
அவள்
முதுமைக் காலம்
வரை
வாழ்ந்த
கோரக்கர்
அவள்
மரணமடைய
ஈமச்சடங்குகள்
அனைத்தும்
செய்துவிட்டு
குகை திரும்பினார்.
உடல் தேடினார்.
அகப்படவில்லை.
அதன் கதைதான்
அரசனால்
முடிக்கப் பெற்று
பல்லாண்டுகள்
ஆகி இருந்ததே!
அதனால்
ஜீவித்திருக்கும்
இடையன்
உடலையே
தன் ஆற்றலால்
கற்ப மூலிகைகள்
உண்டு
கற்ப உடலாக்கிக்
கொண்டார்.
அதற்காக
அவ்வுடலிலேயே
சதுரகிரி மலையில்
நாகார்ச்சுனர்
சாணாக்கிய முனிவர்
போன்றோரோடு
ஆசிரம் ஆசிரமமாய்
தங்கலானார்.
இது
கருவூரார்
வாத காவியத்தில்
இடம் பெற்றுள்ள
நிகழ்வு.
பொருள்
விளங்காத
பாடல்களை
எளிமையாக
எழுதினார்
கோரக்கர்,
வழக்கம்போல்
சித்தர்களிடையே
கோபம்
விளைந்தது.
நந்திதேவர்
இடைக்காடர்
அகப்பேயார்
மச்சமுனி
சட்டைநாதர்
பிரம்மமுனி
அழுகண்ணர்
ஆகிய
ஏழு சித்தர்களும்
எழுவர் அணியாக
கோரக்கரைச்
சூழ்ந்து
ஆர்ப்பாட்டமே
செய்தனர்.
எளிமையாக
கோரக்கர் எழுதிய
பதினாறு நூல்களையும்
தம்மிடம் ஒப்படைக்க
வற்புறுத்தினர்
ஏழு சித்தர்களும்.
சரியென
வாக்களித்த
கோரக்கர்
அவர்களுக்கு
உணவு
படைத்தார்.
‘அடை'
அவர் தந்த
உணவு.
அந்த அடையில்
அடைந்திருந்தது
ரகசியமாய்
கஞ்சா இலை.
உண்டவர்
மயங்கினர்.
அவர்கள்
எழுவதற்குள்
பதினாறு
நூல்களின்
சாரத்தை
200 பாக்களில்
அடைத்து
ஒரு
தொகுப்பை
உருவாக்கினார்
கோரக்கர்.
சந்திர ரேகை
என்னும்
அந்நூல்
அவர்
படைப்புகளில்
சிறந்தது.
200 பாடல்களும்
ஞான ரகசியங்களின்
ஒட்டுமொத்த சாரம்.
குகைகளில்
வைத்து
பாதுகாக்கப்
போவதாக
பிற சித்தர்கள்
எடுத்துச் சென்று
விட்டதால்
இன்று
கோரக்கரின்
நூல்கள் பல
காணக்
கிடைக்கவில்லை.
கோரக்கரின்
பிறப்பு
குறித்து
குழப்பம் உண்டு.
பிராமண குலத்தில்
பிறந்து
பின்னர்
சேணியராகி
இறுதியில்
கோனார்
ஆனார்
என்கிறார்
கருவூரார்.
வடக்கே
இருந்து
வந்தவர்
கோரக்கர்.
இவரே
கோரக்க நாத்
என்கிறார்கள்
சிலர்.
வசிட்ட
மகரிஷிக்கும்
ஒரு
குறப் பெண்ணுக்கும்
பிறந்தவர்
கோரக்கர்
என்பது
போகரின் கருத்து.
கோரக்கரை
'அனுலோமன்'
என்பார்கள்.
தாழ்ந்த குலத்தாய்க்கும்
உயர்குலத் தந்தைக்கும்
பிறந்தவன்
என்பது
அனுலோமனின்
பொருள்.
கோரக்கர்
மராட்டியர்
என்றும்
வீர சிவாஜி
வணங்கிப்
போற்றியவர்
என்றும்
செய்தி உண்டு.
மிகக்
கோரமான
நோய்களைத்
தீர்க்க
மருத்துவம்
கண்டதால்
கோரக்கர்
எனப்
பெயர் வந்ததாக
ஒரு
குறிப்பு உள்ளது.
அகத்தியரின்
பதினெட்டு
மாணவர்களில்
ஒருவர் என்றும்
எமநாட்டு
என்பாரிடம்
உபதேசம்
பெற்றவர்
என்றும்
அகத்தியரின்
சௌமிய சாகரம்
கூறுகிறது.
கார்த்திகை
ஆயில்யத்தில்
பிறந்த
கோரக்கருக்கு
மனைவியர் ஐவர்
மக்கள் அறுபதின்மர்
என்கிறது
கோரக்கர் முத்தாரம்.
கொல்லிமலையிலும்
சதுரகிரி மலையிலும்
சீன தேசத்திலும்
பற்பல ஆண்டுகள்
வாசம் செய்த
கோரக்கர்
தேச சஞ்சாரம்
செய்த காலமும்
போகருடனும்
பிரம்மமுனியுடனும்
தோழமையோடு
உலவிய காலமும்
கணக்கில் அடங்காதது.
தேச சஞ்சார
காலத்தில்
மைசூரூ
சாமுண்டி மலையில்
வாழ்ந்திருந்ததாக
போகர்
பகர்கிறார்.
கோரக்கர்
அருளிய
நூல்கள்
மொத்தம்
40 என்கிறது
ஒரு குறிப்பு.
நமனாசத் திறவுகோல்
என்னும்
கோரக்கரின் நூல்
பிற
சித்தர் நூல்களின்
மறைப்புகளைத்
திறக்கவல்ல
ஞானச் சாவி.
மருத்துவம்
சோதிடம்
இரு துறைகளை
ஆழ்ந்து பேசும்
நூல்களை
கோரக்கர்
அருளியுள்ளார்.
கோரக்கர் சித்தர்
சமாதி அடைந்த
தலங்களின்
எண்ணிக்கை
மிக அதிகம்.
பன்னிரெண்டு
இடங்களில்
சமாதி உள்ளது.
பொதிகை மலை
ஆனைமலை
கோரக்நாத் திடல்
(பாண்டியநாடு)
வடக்குப்
பொய்கைநல்லூர்
பரூர்ப்பட்டி
(தென்னாற்காடு).
சதுரகிரி
பத்மாசுரன் மலை
(கர்நாடகம்)
கோரக்பூர்
(வடநாடு).
பேரூர்
பட்டீஸ்வரர் கோயில்
ஹரித்துவார்
கோரக்கமலை
(பாக்கிஸ்தான்)
கோர்க்காடு
(புதுச்சேரி).
சித்தர்கள்
பல
இடங்களில்
சித்தி
அடைந்ததில்
ஆச்சரியம்
இல்லை.
அவர்கள்
சித்த வல்லமை
அப்படி.
வடக்குப் பொய்கை
நல்லூரில்
ஐப்பசித் திங்கள் (பரணி)
பௌர்ணமி நாளில்
சமாதி அடைந்ததாகக்
குறிப்பொன்று
உள்ளது.
கோரக்கர் வழிபாடு
நேபாள நாட்டில்
பிரசித்தம்.
காட்மண்டுவில்
கோரக்கர் ஆலயம்
பிரசித்தி பெற்றது.
கூர்காங் இன மக்கள்
கோரக்கர் வழி வந்தவர்
எனப்
பெருமிதம்
கொள்கின்றனர்.
நேபாளி
பணத்தில்
நாணயத்தில்
கோரக்கர்
திரு உருவம்
இடம் பெற்றுள்ளது.
கோரக்கரை
மானசீகக் குருவாக
வழிபட்டவர்
மராட்டிய
சிவாஜி.
கோரக்பூரில்
கோரநாத் மந்திர்
உள்ளது.
இது
ஜீவசமாதிக் கோயில்.
கர்நாடக
அருளாளர்
கோராகும்பர்
கோரக்கரை
வழிபட்டு
உயர்ந்தவர்.
இஸ்லாமிய
மக்களின்
இதயத்திலும்
கோரக்கர்
இடம் பெற்றிருப்பதை
இன்றும்
காண முடிகிறது.
கோரக்கர்
சித்தர்கள்
போற்றிய
பெரும்
சித்தர்.
அவரைத்
தொழுவது
சித்தர்
உலகையே
பூஜிப்பதற்குச்
சமம்.
ஓம் நமசிவாய!
(கோரக்கர்-மச்சேந்திரர்-பிரம்மமுனி திவ்விய சரித்திரம் நிறைவு)
பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். வளர்க உங்கள் திருப்பணி..🙏
பதிலளிநீக்கு