சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - மச்சேந்திரரர்-கோரக்கர்-பிரம்மமுனி (பாகம் 1)
மச்சேந்திரர்-கோரக்கர்-பிரம்மமுனி
(பாகம் 1)
மாரிமைந்தன் சிவராமன்
சித்தர்கள்
கோரக்கர்
மச்சேந்திரர்
பிரம்ம முனி
மூவரின்
திவ்விய சரித்திரம்
ஒன்றோடொன்று
தொடர்புடையது.
எனவே
மூவரின்
திவ்விய
சரித்திரத்தையும்
ஒன்றாகவே
தரிசிப்போம்.
கோரக்கர்
சரித்திரம்
ஒரு பெரிய
சமுத்திரம்.
அவர்
பிறப்பே
விசித்திரம்.
சக சித்தர்களுக்கு
உற்ற நண்பராய்
ஞான குருவுக்கு
ஏற்ற சீடராய்
வலம் வந்தவர்
கோரக்கர்.
அவர்
பிறப்பு மட்டுமல்ல
வார்ப்பும்
அபூர்வமானது.
அமைதியானது.
காய கற்பத்திற்கு
உகந்த மருந்தென
கஞ்சாவையும்
புகையிலையையும்
சிபாரிசு செய்யும்
பின்னணியில்
இருக்கும் சித்தர்கள்
இருவர்.
அவர்களில் ஒருவர்
கோரக்கர்.
கோரக்கர்
திவ்விய சரித்திரத்தில்
மச்சேந்திர முனிவரின்
கதையும் அடக்கம்.
பிரம்ம முனியின்
உறவும் அடக்கம்.
கோரக்கர்
உருவாய்
நடமாடிய
காலத்தில்
குரு
மச்சேந்திரருடன்
இருந்த காலமே
அதிகம்.
அது பெரும் பகுதி
எனச்
சொன்னால்
அதில்
ஒரு பாதி
சக சித்தர்
பிரம்ம முனியுடன்
சேர்ந்திருந்த நாட்களும்
தவத்தில் தம்மைத்
தொலைத்த நாட்களும்
அடங்கும்.
பிரம்ம முனியையும்
கோரக்கரையும்
எப்போதும்
ஒன்றாகவே
பார்த்த
சித்தர் உலகம்
இருவரையும்
'இரட்டைச் சித்தர்கள்'
எனச்
சிலாகிக்கிறது.
கோரக்கர்
சிறப்பறிவதற்கு
முன்
மச்சேந்திரர்
பிறப்பறிவது
சிறப்பாயிருக்கும்.
மச்சேந்திரரின்
பிறப்பே
தெய்வ சித்தம்.
ஆலகால
விஷமுண்ட
சிவபெருமான்
பார்வதி தேவிக்கு
ஆழ்நிலை
விஷயமுள்ள
மந்திரங்களை
உபதேசம்
செய்து
கொண்டிருந்தார்.
இடம்:
கோடியக்கரை
கடற்கரை.
ஆர்ப்பரிக்கும்
கடல்.
சலிக்காத
அலைகள்.
மதி மயங்க
வைக்கும்
காற்று.
மகாதேவனின்
மந்திரச் சொற்கள்
மாதேவியின்
கவனச் சிதறலால்
அவள்
செவிகளைச்
சென்று
அடையவில்லை.
பதிலுக்குக்
கடற்கரையில்
கர்ப்பமுற்றிருந்த
ஒரு மீனின்
செதில்களில்
நுழைந்தன.
அவ்வழியே
கர்ப்பப்பையில்
பிறப்புக்குக் காத்திருந்த
குஞ்சொன்றின்
செவிகளில்
நிறைந்தன.
மந்திரம்
முடிந்தபோது
மீனின்
வயிற்றிலிருந்து
பிள்ளை ஒன்று
வந்தது.
அது
மானிட வடிவில்
இருந்தது.
உடன்
மகேசன் முன்
நின்றது.
ஆதி சிவன்
புன்னகைத்தார்.
அவர்
புன்னகைக்கு
அர்த்தங்கள் ஆயிரம்.
"மச்சத்தின்
வயிற்றிலிருந்து
வந்ததால்
உனக்கு
மச்சேந்திரன்
எனப்
பெயர் சூட்டுகிறேன்."
மெத்த பெருமிதத்தோடு
சிவனார் வாழ்த்த
மச்சேந்திரர்
பிறவியிலேயே
திருவருள்
கிடைக்கப் பெற்றார்.
சிவனருள்
நேரடியாகக்
கிடைத்தால்
மச்சேந்திரர்
எப்போதும்
'சிவ சிவ'
என
சிவனடி
தேடிவந்தார்.
ஒரு நாள்
வழக்கப்படி
பிச்சை எடுத்துண்ண
ஒரு வீட்டின்
முன்
தட்டேந்தி நின்றார்.
அன்னமிட்ட
அம்மா
ஒரு பிராமணத்தி.
மச்சேந்திரரின்
உருவத்தில்
கணிவு
கண்டாள்.
"சுவாமி...
பரிசுத்த
மகான்
போலிருக்கிறீர்கள்.
என்
மனம்
நித்தம் கொள்ளும்
வேதனைக்கு
விடியல் இல்லை.
இந்த வீட்டின் தரித்திரம்
நீங்க வேண்டும்.
சரித்திரம் படைக்கப்
பிள்ளை வேண்டும்.
வரம் தாருங்கள்."
வணங்கி நின்றாள்.
"இதைச் சாப்பிடம்மா...
உன் ஆசை
நிறைவேறும்."
சுருக்குப் பையெடுத்து
உருக்கமாக இறைவனைத்
தொழுத வண்ணம்
திருநீறு தந்தார்.
"சாப்பிடம்மா..
நல்ல
பிள்ளை பிறப்பான்.
பின்னொரு நாள்
வந்து பார்ப்பேன்.
அவன்
உன்னோடு
துள்ளி
விளையாடுவதை."
ஆசி தந்து
விடைபெற்றார்.
ஒன்பது ஆண்டுகள்
உருண்டோடி இருக்கும்.
ஒருநாள்
மச்சேந்திரர்
அவ்வழி வந்தார்.
அந்த அம்மாவின்
வீட்டின் முன்
நின்றார்.
உணவு வந்தது.
"உன் மகன் எங்கே?
கூப்பிடு.
பார்க்க வேண்டும்.
உணவெல்லாம்
அவனைப்
பார்த்த பின்னரே."
முனிவர்
கண்களை
வீட்டினுள்
சுழல
விட்டார்.
அவரின்
பார்வை
அந்த அம்மா
மீது
பட்டபோது
அத்தனை கண்ணீர்
அவள் கண்களிலிருந்து.
"என்னம்மா
ஏது நடந்தது?"
"சுவாமி...
நீங்கள் தந்த
விபூதியை
நான்
வீதியில்
எறிந்து விட்டேன்.
நீங்கள்
பிள்ளை தரும்
சாமியாரல்ல.
பிள்ளை பிடிக்கும்
போலியார்
எனப்
பக்கத்து வீட்டுக்காரி
சொன்னாள்.
திருநீறை
எடுத்தேயானால்
சாமியார் பின்னால்
சென்று விடுவாய்.
அது நீரல்ல.
வேறு
மந்திரித்த சாம்பல்
எனப்
பயம் காட்டினாள்.
பயந்து விட்டேன்.
அடுப்பு
நெருப்பில்
இட்டுவிட்டேன்.
பின்
அதைக்
குப்பைத் கூளத்தில்
போட்டு விட்டேன்.
என்ன செய்வது?
எல்லாம் என் விதி!
பிள்ளை பாக்கியம்
உங்களால்
கிடைத்திருக்கும்.
வீணாக்கி விட்டேன்."
கண்ணீர்
தாரை தாரையாகத்
தரையைத் தொட்டது.
முனிவருக்கும்
அதிர்ச்சிதான்.
சில நொடிகளில்
மீண்டார்.
"பரவாயில்லை
தாயே!
குப்பை கொட்டிய
இடத்தைக் காட்டு."
காட்டினாள்.
அது
மாட்டுத் தொழுவம்.
குப்பையும் கூளமுமாய்
சாணியும் சகதியுமாய்
ஒரு மலை போலிருந்தது.
அருகில் சென்ற
மச்சேந்திரர்
‘கோரக்கா...!'
என
உணர்ச்சியாக
உச்சரித்தார்.
‘வந்தேன்’
எனக்
குரல் வந்தது.
குப்பைகளை
ஒதுக்கிய போது
தவ நிலையில்
இருந்தான்
ஒன்பது வயதுப்
பாலகன்.
"அம்மா
இந்தா
உன் மகன்...
உன் கருவறை
தடுத்தாய்.
தொழுவறை
ஏற்றது.
எனவே
இங்கு
பிறந்தான்."
ஆசையாய்
அருகில் வந்தாள்
அம்மா.
"அம்மா...!
நீங்கள் வெறும்
சும்மா.
ஒரு பேருக்குத்தான்
அம்மா.
உண்மையில்
இவரே
என் தாய் தந்தை.
குருவும் இவரே!"
சிறுவன் பேச்சு
கணீர் என்றிருந்தது.
அதில்
அர்த்தமிருந்தது.
மச்சேந்திரர்
முன் செல்ல
அவரடி தொடர்ந்தான்
கோரக்கன்.
பின் சென்றவனே
பின்னாளில் சித்தரானார்.
மகா சித்தரானார்.
மச்சேந்திரரின்
முதல் சீடர்
முதன்மைச் சீடர்
கோரக்கர்.
ஞானம்
சித்துகள்
காயகல்பம்
காயசித்தி எனப்
படிப்படியாக
யாவும்
கிடைத்தது.
குரு அருள்
திரு அருள்
ததும்பி வழிந்தது.
எப்படியோ
கர்வம் கொஞ்சம்
காலடி ஏறி
தலைதனில்
கனத்து நின்றது.
அல்லமாப் பிரபு
ஓர் அற்புதச் சித்தர்.
சிவ அம்சம்
அச்சாய் நிறைந்தவர்.
காலக் கணக்கில்லாத
காகபுஜண்டருக்கே
உபதேசித்த மூத்தவர்.
காலாங்கிநாதரைப்
போல்
காற்றை உடலாகக்
கொண்டவர்.
ஒரு நாளில்
இறையருள்
அல்லமாப் பிரபுவையும்
கோரக்கரையும்
கூட்டியது.
தன்னைப் பற்றித்
தொகை தொகையாய்ச்
செருக்கோடு சொல்லிய
கோரக்கர்
கத்தி ஒன்றை
அல்லமாப் பிரபுவிடம்
கொடுத்து
தன்னை வெட்டச்
சொன்னார்.
வெட்டிய போது
கோரக்கர்
உடலில்
கத்தி
பாய முடியவில்லை.
எத்தனை முயன்றும்
கூர்முனை
மழுங்கியதே தவிர
கத்தியின் கூர்மையும்
சித்தரின் திறனும்
வேலையாகவில்லை.
வெற்றியாகவில்லை.
"பார்த்தீர்களா...
என் சக்தியை!
காயசித்தி
பெற்று விட்டேன்.
இனி நான்
கடவுள் போல."
கண்களால்
மனம் திறந்தார்
கோரக்கர்.
அல்லமாப் பிரபு
அடுத்தவர்
மனம் நினைப்பதை
அறியும்
ஆற்றல் பெற்றவர்.
அமைதியாய்ச் சிரித்தார்.
இப்போது
அல்லமாப் பிரபு முறை.
கத்தி கை மாறியது.
குறையேதும் இல்லாத
அல்லமாப் பிரபுவை
கூர்முனை கத்தி
கொண்டு
வெட்டினார்
கூர்த்த மதி கோரக்கர்.
கத்தி உடலினுள்
பாய்ந்தது.
சுழன்றது.
முன்னும் பின்னும்
முண்டிப் பார்த்தது.
கோரக்கரருக்குத்தான்
வேர்த்துப் போனதே
தவிர
ஏதொன்றும்
நடக்கவில்லை.
கோரக்கர் கத்தியை
வெளியே
எடுத்தார்.
அந்தக் கத்தி
அச்சு அசலாகப்
புதியது போலவே
இருந்தது.
கூர்முனை சற்றும்
மழுங்காமல்
போர் முனை செல்லத்
தயாராய் இருந்தது.
என்ன ஆச்சரியம்!
கோரக்கருக்குப்
பேச்சே வரவில்லை.
அல்லமாப் பிரபு
அன்பு சுரக்க
கோரக்கர்
முதுகை ஆதரவாய்
நீவியபடி
சொன்னார்.
"இன்னும்
பக்குவப்படு.
உன் உடம்பு
காயகல்பமாகி
விட்டது.
உன் மனது
காயகல்பம்
அடையவில்லை.
உடம்பும்
உள்ளமும்
காயகல்பம்
அடைந்தால்
உடம்பு
லேசாகி விடும்.
மேம்படு.
உடம்போடு
நின்று விடாதே.
கர்வம் தவிர்.
சர்வமும் சித்தியாகும்."
நறுக்கென்று
சொன்ன
அல்லமாப் பிரபு
சுருக்கென்று
ஆசி தந்து
விருட்டென்று
விடைபெற்றார்.
கோரக்கர்
நடந்ததை
குருநாதர்
மச்சேந்திரரிடம்
கூறி
உபதேசம்
கேட்டார்.
மச்சேந்திரரின் பதில்
அல்லமாப் பிரபுவின்
உபதேசங்களின்
நகலாய் இருந்தது.
அது
கோரக்கரைச்
செதுக்கியது.
செம்மைப்படுத்தியது.
அல்லமாப் பிரபு
உருவில் வந்து
கோரக்கரின்
செருக்கடக்கி
வழிகாட்டியவர்
இறைவனே
என்பாரும்
உண்டு.
இன்னொரு
பிச்சை
சம்பவம்
குரு சீடர்
உறவுக்கு
மேம்பட்ட
எடுத்துக்காட்டு.
அது
ஓர் அக்ரஹாரம்.
அங்கு
பிச்சை எடுக்கப்
போனார்
கோரக்கர்.
அன்று
அந்த வீட்டில்
நீத்தார்
நினைவு நாள்.
வீட்டம்மாள்
கீரை வடை ஒன்று
தந்தாள்.
கீரை வடை
மணம் வீசியது.
கார வடையாய்
குருநாதரின்
மனதைக் கவர்ந்தது.
மறுநாள்
கோரக்கரிடம்
கேட்டார்
மச்சேந்திரர்.
"நேற்று
மாதிரி
இன்றும்
வடை
கிடைக்குமா?'"
குரு
விருப்பம்
மறுப்பாரா
சீடர்?
அதே
வீட்டிற்குச்
சென்றார்.
அம்மணியிடம்
"நேற்று தந்த
வடை மாதிரி
இன்றும்
தாருங்கள்"
வேண்டுகோள்
வைத்தார்.
அப்பெண்மணி
சிரித்தார்.
"சுவாமி...!
நேற்று
வீட்டில்
விசேஷம்.
அதனால்
வடை
போட்டேன்.
தினமும்
வடை
செய்ய
வாய்ப்பில்லை."
கெஞ்ச
ஆரம்பித்தார்
கோரக்கர்.
"என்ன சுவாமி...
பசி துறக்க
வேண்டியவர்
ருசி கூடத்
துறக்காமல்
ரிஷி வேடம்
போட்டிருக்கிறீர்கள்
போலிருக்கே."
கேலி பேசினாள்.
"இல்லையம்மா...
இது
என்
குருவின் விருப்பம்.
நிறைவேற்றுவது
என் கடமை."
"நல்ல குரு..
நல்ல சீடர்...
இருவருக்குமே
நாவடக்கம்
இல்லையே."
ஓசையோடு
சிரித்தாள்.
ஆசையோடு
கோரக்கர்
தொடர்ந்து
கெஞ்சினார்.
"என் குருநாதர்
ஆசை."
"குருவென்றால்
எதுவும் செய்து
விடுவீர்களா?
நாளை
உங்கள்
கண் வேண்டுமென்றால்
பிடுங்கித்
தந்து விடுவீர்களா?"
கேள்வி வந்தது.
கேலியாய் ஒலித்தது.
"நாளை
என்ன...?
இன்றே தருகிறேன்
என் கண்ணை.
இதோ பார்...
இதற்குப்
பதில்
நீ
வடை
தாம்மா."
சொடுக்கிடும்
நேரத்தில்
கண்ணைப்
பிடுங்கி
ரத்தம்
சொட்டச் சொட்ட
அம்மணி
முன்பு
வாழை இலையில்
வைத்தார்.
பதறிப் போனாள்
அப்பெண்மணி.
மனம் பொறுக்காது
வீட்டினுள் சென்று
நெய்யிலே
வடை சுட்டு
ஓடி வந்து
தந்தாள்.
நெய்
வடையோடு
குருவிடம்
ஓடினார்
கோரக்கர்.
வடையை
வாங்கிய
மச்சேந்திரர்
கோரக்கர்
முகத்தைக்
கவனிக்காது
ருசிக்க
ஆரம்பித்தார்.
சாப்பிட்டு
முடிக்கும் வரை
காத்திருந்தார்.
கண் துருத்தி
கண்ணீரும்
ரத்தமும்
வழிந்தோடியும்
வாய் திறக்கவில்லை
கோரக்கர்.
குரு பக்தி.
உண்டு
முடித்த பின்
கோரக்கரைப்
பார்த்தார்
குருநாதர்.
நடந்ததை
அறிந்தார்.
துடித்துப்
போனார்.
'என்னே
குரு பக்தி'
இறுகத்
தழுவினார்.
இறையை
நினைத்தார்.
மீண்டும்
கண்
புதிதாய்ப்
பூத்தது.
அது
முன்னை விட
ஒளியோடு
இருந்தது.
''கோரக்கா...
நாளுக்கு நாள்
நீ
உயர்ந்து வருகிறாய்.
என்னையும்
விஞ்சிய
சித்தனாய்
ஒளிர்வாய்."
ஆசி தந்தார்.
''கொஞ்ச நாள்
மலையாள
தேசம்
செல்கிறேன்.
நீதான்
அங்கு வந்து
அழைத்து வர
வேண்டியிருக்கும்.
செல்லட்டுமா?
சந்திப்போம்."
விடை பெற்றார்
வடைப் பிரியரான
மச்சேந்திரர்.
மலையாள
தேசத்தில்
அரச குலப்
பெண்ணான
பிரேமலதாவை
மச்சேந்திரர்
மணக்க
நேர்ந்தது.
அடுத்து
ஆண் மகவு
பிறந்தது.
மீனநாதன்
குழந்தையின்
பெயர்.
ஒரு நாள்
மச்சேந்திரர்
அடுத்து
நடக்கவிருப்பதை
மனைவியிடம்
சொன்னார்.
"என்
சீடன்
கோரக்கன்
எனை
அழைத்துப் போக
வருவான்.
நாம்
பிரிவோம்.
இணைந்ததும்
பிரிவதும்
இறைவன் சித்தம்."
உண்மை
கசந்தது.
இளவரசியல்லவா!
மச்சேந்திரர் கூற்றைச்
சுக்கு நூறாக்க
ரகசியமாய்ச்
சட்டமே போட்டாள்.
"நாட்டுக்குள்
துறவி என்று
யார் வந்தாலும்
கொன்று விடுங்கள்."
இது சமயம்
குருவைத் தேடி
கோரக்கர்
புகுந்தார்
இறைவனின்
தேசத்திற்குள்.
வழக்கம் போல்
பிச்சை கேட்கப் போன
வீட்டில் பெண்மணி
ஒருத்தி
அரச உத்தரவை
எச்சரிக்கையாய்ச்
சொல்லி
‘ஜாக்கிரதை’
என்றாள்.
குருநாதர்
மச்சேந்திரரைச்
சந்திக்க
நாள் பார்த்துக்
காத்திருந்தார்
கோரக்கர்.
அதுவரை
காடுகளில்
ஒளிந்து
திரிந்தார்.
ஒருநாள்
ஒரு
கூத்தாடிக்
கூட்டம்
காட்டில்
தங்கியது.
கூத்துக்
குழுவின்
தலைவன்
மட்டும்
சோகமாய்
இருந்தான்.
கோரக்கர்
விசாரித்தார்.
"அரண்மனையில்
அரசன் முன்
கூத்து நடத்த
வாய்ப்புக்
கிடைத்துள்ளது.
எம்
கெட்ட நேரம்.
மத்தளம்
வாசிப்பவன்
நோயில்
சாய்ந்துள்ளான்.
அரசி
கோபக்காரி.
என்ன
நடக்குமோ?"
"கவலைப்படாதே!
எனக்கு
மத்தளம்
வாசிக்கத்
தெரியும்.
நன்றாய்த் தூங்கு.
காலை பார்க்கலாம்."
குதூகலத்துடன்
சொன்னார்
கோரக்கர்.
குருநாதரைப்
ஒருமுறை
பார்த்தால் போதும்.
அரசு துறந்து
குடும்பம் விடுத்து
தன்னோடு
திரும்பி விடுவார்'
என
உறுதியாய் நம்பினார்
கோரக்கர்.
மறுநாள்
அரண்மனையில்
ஆரவாரக் கூத்து.
மத்தள
வாசிப்பில்
வல்லவரான
கோரக்கர்
அடித்த அடி
புதிய ஒலியைப்
பரப்பியபோது
மச்சேந்திரருக்குக்
கோரக்கரின்
வருகை தெரிந்தது.
அது அவருக்கு
இசைவாய் இருந்தது.
"அதோ!
அவன்தான்
என் சீடன்
கோரக்கன்."
அரசி
அதிர்ந்தாள்.
அதற்கும்
அவளிடம்
ஓர்
அற்புதத்
திட்டமிருந்தது.
"அவரை
அரண்மனையிலே
தங்க வைப்போம்!"
பிரியம் காட்டினாள்.
'அரண்மனைச்
சுகமும்
சூழலும்
கோரக்கரையே
மாற்றிவிடும்.
இச் சுகம்
போதுமென
இங்கேயே
தங்கி விடுவார்.
மச்சேந்திரர்
அழைத்தாலும்
மறுக்கும்
வகையில்
அவரை
அசத்தி விடலாம்
மடக்கி விடலாம்'
என
அரச
சுகத்தின்
அம்சம் அறிந்த
அரசி
திட்டம் தீட்டினாள்.
கோரக்கர்
அரச விருந்தினராய்
அரண்மனையில்
தங்கினார்.
ராஜ உபசாரம்!
அதில்
பரவசமிருந்தும்
கோரக்கர்
ஊர் திரும்பக்
காத்திருந்தார்.
குருநாதரின்
கண்ணசைவுக்குக்
காத்திருந்தார்
மச்சேந்திரர்
நிலைதான்
மர்மமாயிருந்தது.
ஒருபுறம்
மனைவி
மகனைப்
பிரிய மனமில்லை.
இன்னொரு புறம்
துறவு வாழ்க்கையும்
சித்தர் நிலையும்
ஓயாது அழைத்தன.
மனதும் ஏங்கியது.
இறை கணக்கு
மச்சேந்திரரை
சித்தர் நிலைக்கே
அழைத்தது.
ஒரு நாள்
படுக்கையில் மலம்
கழித்து விட்டான்
குழந்தை
மீனநாதன்.
மச்சேந்திரன்
கோரக்கரை
அழைத்து
மகனைக்
கொடுத்து
தூய்மைப்படுத்தச்
சொன்னார்.
கோரக்கர்
வினயமாய்
இருகால்
விரித்துப்
பிடித்து
துணி துவைக்கும்
கல்லில்
அடித்துப்
பிழிந்து
உலர்த்திப் போட்டார்
அக்குழந்தையை.
"மீனநாதன்
எங்கே?"
அரசி கேட்டாள்.
நடந்ததை
அறிந்து
நடுங்கிப் போயினாள்
அரசி பிரேமலதா.
அப்பா மச்சேந்திரரும்
"அடேய்!
நீ என் சீடனா?"
எனத்
கொந்தளித்தார்.
ஓடிப் பார்க்கையில்
நூற்றி எட்டுத்
துகள்களாய்
உடல்
சிதறியிருந்தது.
அரசி
கோரக்கரின்
கோபம் புரிந்தாள்.
மச்சேந்திரர்
சீடரின்
எச்சரிக்கையை
உணர்ந்தார்.
அரசி
மண்டியிட்டு
வேண்டிக் கதற
அடுத்த நொடிகளில்
துகள்களை
இணைத்து
அழகிய
மீனநாதனை
மீட்டெடுத்து
வழங்கினார்
கோரக்கர்.
அரசிக்குப்
பயம்.
மச்சேந்திரருக்கு
அவளைவிட ப்
பயம்.
'சொன்னபடி
செய்யா விட்டால்
இன்னும்
என்னென்ன செய்வானோ!'
"போகலாமா?"
குருவிடம் கேட்டார்
கோரக்கர்.
மறுப்பேதும்
சொல்லாமல்
மச்சேந்திரர்
புறப்பட்டார்.
தடுப்பேதும்
கூறாமல்
அரசி
அனுப்பி வைத்தாள்.
புறப்படும் போது
கணவர்
மச்சேந்திரரிடம்
கைப்பை
ஒன்று
தந்தாள்.
அதில்
பொற்பாளம்.
தங்கத் தாம்பாளம்
வழிச் செலவுக்கு.
வழியில்
அடிக்கடி
வழிப் போக்கர்களிடம்
மச்சேந்திரர்
கேட்டார்
கைப்பையை
இறுக்கிப்
பிடித்தபடி.
"இங்கு
திருடர் பயம்
உண்டா?"
கோரக்கருக்குக்
கோபமே
வந்தது.
'ஏனிப்படி
பயப்படுகிறார்?’
ஓரிடத்தில்
குளமொன்றில்
குளிக்கும்போது
கைப்பையைக்
கரையில்
வைத்துவிட்டுத்
திரும்பித் திரும்பிப்
பார்த்தபடி
போனார்
குருநாதர்.
சந்தேகத்தில்
பையைத்
திறந்து பார்த்தார்
கோரக்கர்.
உள்ளே
தங்கத் தாம்பாளம்.
விட்டெறிந்தார்
தங்கத்தை
திசை ஏதும்
பார்க்காமல்.
அதன்
எடைக்கீடாகக்
கல்லொன்றை
வைத்து விட்டார்.
பயணம்
தொடர்ந்தபோது
மச்சேந்திரர்
கேட்டார்.
"இந்தப் பகுதியில்
திருடர்கள்
இருப்பார்களா?"
"ஏன்
பயப்படுகிறீர்களா?
எதற்காகப்
பயப்படுகிறீர்கள்?"
கோரக்கரும்
கேட்டார்.
"மடியில்
கனமிருந்தால்தான்
வழியில்
பயமேற்படும்
குருவே.
பயப்படாதீர்கள்."
சீடர்
உபதேசித்தார்.
கைப்பையை
நெஞ்சணைத்தார்
மச்சேந்திரர்.
உள்ளே இருப்பது
வேறு மாதிரியாய்
உறுத்தியது.
கைவிட்டு
எடுத்துப் பார்த்தார்.
கல்.
"கோரக்கா..."
காடு அதிரக்
கத்தினார்
குருநாதர்.
"உன்னை
நல்லவனென
நினைத்தேன்.
என்
மகனைக்
கொன்றாய்.
இப்போது
தங்கத்தைத்
திருடி உள்ளாய்.
கெட்ட
சீடன் நீ.
என்னருகே
நிற்காதே!"
சீறினார்.
பதிலேதும்
பகராத
கோரக்கர்
குருநாதரை
இழுத்துக்
கொண்டு
ஆங்கிருக்கும்
ஒரு குன்றருகே
சென்றார்.
சிறுநீர்
பெய்தார்.
குன்றே
தங்கக் குன்றாகி
கண்களைப் பறித்தது.
மச்சேந்திரர்
நிலை குலைந்தார்.
"அபாரம்...
எதையும்
சமாளிக்கும்
ஆற்றல் பெற்றுவிட்டாய்.
தங்கம்
சித்திக்கும்
வல்லமை
வந்துவிட்டது.
கோபப்படாத
உனது
குணமே
ரசவாத
சித்திக்கு
வித்திட்டிருக்கிறது.
நீ வாழ்க!
நீ
குருவை மிஞ்சிய
சீடன்.
அது
குருவான
எனக்குப்
பெருமையே!
இனி
தனித்தியங்கு
தவம் கொள்.
தயவு காட்டி
மக்களை மேம்படுத்து."
மச்சேந்திரர்
மகிழ்வோடு
வாழ்த்த
தாழ்வோடு
பணிந்த
கோரக்கர்
ஆசி பெற்று
விடைபெற்றார்.
ஓம் நமசிவாய!
(பாகம் 2 தொடரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக