சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - காகபுஜண்டர்(பாகம் 4)
காகபுஜண்டர்
பாகம் 4
மாரிமைந்தன் சிவராமன்
ஞானமும்
பக்தியும்
ஒன்றென
உரைப்போரும்
அரியும்
சிவனும்
ஒன்றென
வாழ்வோரும்
காகபுஜண்டரின்
கதையைச்
சாட்சிக்கு
வைப்பர்.
காகபுஜண்டரின்
உபதேசங்கள்
உலகையே
அதிர வைப்பன.
முன்னும்
பின்னும்
யாரும்
சொல்லாத
பெருமை
கொண்டன.
காகபுஜண்டர்
சொல்வதை
உணரலாமே
தவிர
முழுமையாக
வார்த்தைகளுக்குள்
அடக்க முடியாது.
காகபுஜண்டரின்
உபதேசங்களின்
அடிப்படை
இதுவே.
பல யுகம்
கண்ட
புஜண்டர்
கலி யுகம்
பற்றிச்
சொல்வது
ஓர்
அதிரடிப்
படப்பிடிப்பு.
அவர் சொல்கிறார்:
"கலியுகத்தில்
திருமகள்
கருணையால்
சிற்சில
நன்மைகள்
உலா வரும்.
கலியுகத்தில்
மூச்சடக்கி
பேச்சடக்கி
தவம்
செய்ய வேண்டாம்.
தியானம், தவம்
செய்த பலன்
இறை பெயரைச்
சொன்னாலே
சித்தியாகும்.
மற்ற
யுகங்களில்
நல்லது
செய்தால்
கிடைக்கும் பலன்
கலியுகத்தில்
நல்லதை
நினைத்தாலே
நடந்தேறும்."
காகபுஜண்டரின்
நூல்கள் ஏழு.
அவற்றைப் படிப்பது
பூர்வ ஜென்ம
புண்ணியம்.
காகபுஜண்டரின்
உபதேச உருவாக்கக்
கதை ஒன்று உண்டு.
பிரமிக்க வைக்கும்
உண்மையை
உரித்துத் தரும்
உருவகக் கதை.
தினம்
பன்முறை படித்து
மனம்
சிதறும் போதெல்லாம்
கூர்ந்து படித்து
காலமெல்லாம் படித்துக்
கடைப்பிடித்தால்
தெளிவு கிடைக்கும்.
வாழ்க்கை சிறக்கும்.
அக்கதை
இதோ...
அக்கறையோடு
கேட்பீர்.
'சிரத்தை
எனும் பசு
நம்
உள்ளத்தில்
இருக்க வேண்டும்.
அந்தப்
பசு
வேதங்கள்
காட்டும்
ஜபம்
கடைப்பிடிக்கும்
வழிமுறைகள்
என்ற
பசும்புல்லை
மேய வேண்டும்.
அப்போதுதான்
ஆத்திகம்
எனும் பசுங்கன்று
பிறக்கும்.
அடுத்து
அடுத்த
கட்டம்.
பசுவின்
பின்னிய கால்களைப்
பற்றின்மை
என்ற
கயிற்றால்
கட்ட வேண்டும்.
அதன்பின்
தன்வயப்பட்ட
மனது
என்ற
பால் கறப்பவர்
நம்பிக்கை
என்ற
பாத்திரத்தில்
தர்மம்
என்ற
பாலைக்
கறக்க வேண்டும்.
அடுத்து
மூன்றாவது கட்டம்.
தர்மம்
எனும்
அந்தப் பாலை
ஆசையற்ற மனநிலை
என்ற
நெருப்பின்
உதவியோடு
காய்ச்ச வேண்டும்.
சூடாகும்
பாலை
நிறைவான மனம்
பொறுமைக் குணம்
என்ற
காற்றின்
துணையோடு
ஆற
வைக்க வேண்டும்.
ஆறிய பாலில்
மன அடக்கம்
தைரியம்
என்ற
ஆடை படரும்.
பாலாடையைப்
பாங்குடன் எடுத்து
மனத் தெளிவு
என்ற
பானையில்
இட வேண்டும்.
தத்துவ விசாரணை
என்ற
மத்தைப் போட்டு
புலனடக்கம்
என்ற
தூணில்
இணைக்க வேண்டும்.
பின்
இனிய
சொற்கள்
என்ற
கயிற்றைக் கொண்டு
கடைய வேண்டும்.
முடிவில்
குற்றமற்ற
நல்ல
வைராக்கியம்
என்ற
வெண்ணெய்
திரண்டு
வரும்.
அவ்வெண்ணெயை
யோகம்
என்னும்
நெருப்பில்
நன்மை தீமை
என்னும்
விறகுகளைப் போட்டுக்
காய்ச்ச வேண்டும்.
காய்ச்சும் போது
அகங்காரம்
எனும்
அழுக்கு
திரண்டு மிதக்கும்.
அதை நீக்கினால்
தத்துவ ஞானம்
எனும்
நெய் கிடைக்கும்.
அந்த
மணக்கும் நெய்யை
மனம்
எனும்
விளக்கில் நிரப்பி
விருப்பு வெறுப்புகளை
மனநிலை
என்ற
திரியை இட்டு
கூடவே
தூக்கம்
விழிப்பு
கனவு
சாத்வீகம்
ராஜயம்
தாமயம்
ஆகிய
குணங்களை
சமாதி
என்ற
திரியாக
நிலைநிறுத்த
வேண்டும்.
இந்தத் திரிகளில்
ஞானம்
என்ற
வெளிச்சத்தை
ஏற்ற வேண்டும்.
அந்த
ஞான
வெளிச்சத்தை
அணைக்க
காமம்
குரோதம்
முதலான
விட்டில் பூச்சிகள்
வரும்.
ஆனால் அவை
அழிந்து போகும்.
அப்போது
பரம்பொருள்
எனும்
பெரும்ஜோதி
ஒளி வீசும்.
அதிலிருந்து
ஆத்ம அனுபவம்
எனும்
ஒளிக்கீற்றுகள்
பிரகாசிக்கும்.
அவ்வொளியில்
வேற்றுமை
என்ற மயக்கம்
விலகும்.
அஞ்ஞானம்
முதலான
இருள்
ஓடி
மறையும்.
உள்ளத்தில்
அறியாமை
நீங்கி
ஜீவன்
நிம்மதி
அடையும்.
அந்த
வேளையில்
பல
தொந்தரவுகள்
அடுத்தடுத்து
நிகழும்.
நினைத்ததெல்லாம்
நடக்கும்.
ஏமாந்துவிடக்
கூடாது.
சித்திகள் கிடைக்கும்.
கர்வப்பட்டு விடக்
கூடாது.
எண்ணங்களில்
கீழ்
இறங்கி விட்டால்
கீழ் நிலையே
நிலைத்து
நின்றுவிடும்.
கண், காது
நாக்கு, மூக்கு
உடம்பு
இவ்வைந்து
புலன்களும்
தேவதைகள்.
போகம் தரும்
பொருட்கள்
இப்பேராசை கொண்ட
தேவதைகளுக்குப்
பிடிக்கும்.
பிடிவாதம்
அத்தேவதைகளின்
பிறவிக்குணம்.
ஆட்பட்டால்
அவ்வளவுதான்.
ஆட்டம் காலி..'
இப்படி நீண்ட
ஞான உபதேசம்
அளிக்கிறார்
காகபுஜண்டர்.
இன்னொரு
உபதேசத்தில்
சொல்வார்.
''அரிய பிறவி
மனிதப் பிறவியே.
கொடுமையான துன்பம்
வறுமையே!
மேலான இன்பம்
நல்லவருடன் இருப்பதே!
கொடிய பாவம்
அடுத்தவரைத்
தூற்றுவதே.''
மேலே
உள்ளதை
விளக்கி
விரிவாய்க்
கூறி விட்டு
மனநோய்கள்
பற்றியும்
சொல்கிறார்.
நான் எனும்
அகம்பாவம்
சொறி சிரங்கு.
பொறாமை
அரிப்பு.
துன்பமும் மகிழ்ச்சியும்
கழுத்து நோய்.
பிறர் மகிழ்ச்சியைக்
கண்டு வெம்புவது
காச நோய்.
கொடுமை, வஞ்சனை
குஷ்ட ரோகம்.
அகங்காரம்
மூட்டு வலி.
வஞ்சனை, திமிர்
தற்பெருமை
நாக்கில் புழு வரும்
நோய்.
பொன்னாசை
மண்ணாசை
பெண்ணாசை
அழுத்தமான நோய்கள்.
பொறாமை
விவேகம் இல்லாமை
ஜுரம்.
இவ்வியாதிகள்
இருப்பதே பலருக்குத்
தெரியாது.
அப்படியிருக்கும் போது
அவர்களுக்கு
மருந்து பற்றி மட்டும்
எப்படித் தெரியும்?
இந்த
மனநோய்களுக்கு
மருந்தும்
சொல்கிறார்
காகபுஜண்டர்.
கட்டுப்பாடான
வாழ்க்கை
நற்செயல்கள்
நன்னடத்தை
சகிப்புத் தன்மை
நல்லறிவு
யாகம்
ஜபம்
தானம்
ஞானம்.
ஈடில்லா
சித்தரான
காகபுஜண்டர்
முக்தி
பெற்ற
வரலாறும்
சித்தி
பெற்ற
திருத்தலங்களும்
அறிய
ஆவலா?
கயிலைநாதரைத்
தரிசித்து
முக்தி வேண்டும்
என
வேண்டுதல்
வைத்த
புஜண்டரைப்
பார்த்து
உலக நாயகன்
சொன்னார்.
''பொய்கையில்
மூழ்கு.
கரையேறும்
இடத்தில்
முக்தி கிடைக்கும்."
காகபுஜண்டர்
பொய்கையில்
மூழ்கி
ஆச்சாள்புரத்தில்
எழுந்தார்.
ஆச்சாள்புரம்
இன்றைய
சீர்காழி
அருகே
உள்ள திருத்தலம்.
இங்குதான்
ஞானசம்பந்தருக்குத்
திருமணம் நடந்தது.
திருமண
வேள்வியில்
எழுந்த ஜோதியில்
திருமணத்தில்
கலந்து கொண்டோர்
அனைவரும்
முக்தி பெற்றதாக
புராணம் மகிழும்.
இக்கோயிலில்
யோகீஸ்வரர்
யோகாம்பாளாக
சிவனும் உமையும்
அருள்பாலிக்கிறார்கள்.
காகபுஜண்டர்
காக்கை
முகத்தோடு
ஜடாமுடி சகிதம்
பத்மாசனத்தில்
எழுந்தருளி உள்ளார்.
காரைக்கால்
அருகே
திருமலைராயன்பட்டினம்
என்று ஓர்
அழகிய திருத்தலம்.
அங்கு
காகபுஜண்டர்
மனைவி
பகுளாதேவி
சகிதம்
உறைந்து
அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலே
காகபுஜண்டருக்குத்
தோன்றிய
முதல் ஆலயம்.
அக்கோயில்
தென்னாட்டில்
அமைந்தற்குக்
காரணம்
காகபுஜண்டர்
தென்னாடு
பெற்ற
தமிழர்
என்கிறது
ஓர் ஆன்மிகத் தகவல்.
திருக்காளத்தியில்
காகபுஜண்டருக்குச்
சிலை உண்டு.
அங்கு அவரை
வழிபடுவது
நம் பிறப்பின் சிறப்பு.
கள்ளக்குறிச்சி
அருகே
தென் பொன்பரப்பியில்
சொர்ணபுரீஸ்வரர்
ஆலயத்தில்
காகபுஜண்டர்
பகுளாதேவி
தம்பதி சமேதராய்
தூல சமாதி
அடைந்ததாக
ஒரு தகவல்
இருக்கிறது.
திருச்சி
உறையூரில்
காகபுஜண்டர்
வாழ்ந்து
சித்தி ஆனதாகச்
செய்தி உள்ளது.
காகபுஜண்டர்
17 இடங்களில்
லயமாகி உள்ளார்.
காஞ்சிபுரம்
சென்னை கொரட்டூரும்
அவற்றில்
முக்கியமானவை.
காகபுஜண்டரின்
அவதார தினம் குறித்து
இரண்டு விதக்
கருத்துக்கள் உண்டு.
பங்குனித் திங்கள்
ஆயில்ய நட்சத்திரம்
என்கிறது
சில பழைய நூல்கள்.
கன்னி ராசி
உத்திர நட்சத்திரத்தில்
இரண்டாம் பாதம்
என்கிறார்
புஜண்டரின் சீடர் போகர்.
7 லட்சம்
பிரளயங்களைக் கண்ட
காகபுஜண்டர்
ஒவ்வொரு
பிரளயங்களின் போதும்
காக உருவில் தப்பித்து
வானத்தில் உச்சிக்குச்
சென்று
அவிட்ட நட்சத்திரமாகவே
மாறி விடுவார்.
நாள் நட்சத்திரம்
வேறுபாடு
ஒரு புறம் இருக்கட்டும்.
வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம்
அவர் திருத்தலம் சென்று
வணங்கி நின்றால்
வாழ்க்கை சிறக்கும்.
குறிப்பாக
உத்திரம் ஆயில்யம்
நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள்
பூஜிக்க வேண்டிய
மகாசித்தர்
காகபுஜண்டர்
என்பது
சத்திய உண்மை!
(காகபுஜண்டர் திவ்விய சரித்திரம் -நிறைவு)
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
Om namasivaya
பதிலளிநீக்கு