சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 7)


போகர் பிரான்

(பாகம் 7)

-மாரிமைந்தன் சிவராமன்


போகர் 
ஓர் 
அற்புதச் சித்தர்.
பொறியியல் துறையின் 
வல்லப சித்தர்.

போகர் 
கட்டிய 
மரக்கப்பலும் 
தேவ ரதங்களும் 
வேறெந்த சித்தர்களும் 
சிந்திக்காதவை.

அவற்றை
உருவாக்கிய
விதத்தை
வித்தையை
பாடம் போல்
தன் பாடல்களில்
பதமாய்க்
கற்பித்திருக்கிறார்.

2400 அடி நீளம்.
300 அடி அகலம்.
300 அடி உயரம்.
ஏழு மாடி.
64 வீடுகள்.

கொஞ்சம்
கற்பனை செய்யுங்கள்!

2400 அடி நீளம்.
300 அடி அகலம்.
300 அடி உயரம்.
ஏழு மாடி.
64 வீடுகள்.
இவை
அரண்மனை ஜாடையில்.

கிழக்கும் மேற்குமாய்
வாயில்கள்.
தெற்கும் வடக்குமாய்
ஜன்னல்கள்.

ஒவ்வொரு மச்சும்
ஆறு கால் மண்டபம்
போல்.
ஒவ்வொரு மச்சிலும்
128 வாயில்கள்.

இத்தனை பிரமாண்டமும்
எதன் மீது தெரியுமா?

ஒரு
மரக் கப்பலின் மீது.

டைட்டானிக் கப்பலே
கிட்ட வர முடியாத
அத்தனை அம்சங்கள்.

கப்பல் இயங்கும்
தொழில் நுட்பம்
போகர் கொண்ட
மதி நுட்பம்.

அவையாவும்
ஒளிவு மறைவில்லாப்
பெட்டகமாய்
பாடலாக - நீங்களே
படிக்கலாம்.

அப்பப்பா...
என்ன ஆச்சரியம்!
அந்தக் கப்பல்
நீராவிக் கப்பலாம்.

கப்பலின் தலைவர்
இயக்கிய மாலுமி
யார் தெரியுமா?

போகர் தான்.
தன்னிகரில்லா
போகரே தான்.

சீனாவில்
இருந்த போது
அமைத்த இந்தக்
கப்பலில்
மக்களையும்
ரிஷிகள் பலரையும்
ஏற்றிக் கொண்டு
உலகைச் சுற்றி
ஏழு கடல்களையும்
காண்பித்தார்
சுற்றுலாப் பிரியரான 
பற்றிலா சித்தர்.

சுற்றுலா.
ஆன்மிகச் சுற்றுலா.
போகர் பிரான்
மக்களுக்குச்
சொன்ன
அக மகிழ் தத்துவம்.

கடல் வழிப்
பயணத்திற்கு
மரக்கப்பல்
படைத்தவர்
விண்வெளிப்
பயணத்தை
விட்டு வைப்பாரா
என்ன?

வானூர்தியும்
படைத்தார்.

கையை நீட்டி
சித்து புரிந்து
மந்திரத்தால்
மாங்காய்
பறித்திடவில்லை
சித்தர் பிரான்.

உயர்
தொழில் நுட்பம்.
இயந்திர இயக்கம்.
அறிவியல் டெக்னிக்.

அந்தப் பறக்கும்
விமானத்தின்
பெயர்
'தேவரதம்.'

விளையாட்டாய்
அதைக்
'காத்தாடி'
என்றழைப்பது 
போகரின் வழக்கம். 

காத்தாடிக்குப்
பட்டம் எனப்
பெயருண்டு அல்லவா?
பறக்கும் பட்டமே
காத்தாடி.

30 அடி நீளம்
30 அடி அகலம்
என ஒரு 
சதுரப் பரப்பில்
பட்டம் செய்தார்
போகர்.

ஒரு குடை ராட்டினம்
போல் 
அதை அமைத்து
இன்றைய
ஹெலிகாப்டர் 
மாதிரி
பறக்க வைத்தார்
போகர்.

காந்தக் 
கொலுசுகளும்
நார்ப்பட்டுக்
கயிறுகளும்
சித்த தொழில்
நுட்பங்களும்
கொண்டு
காத்தாடி
செய்து
பறக்க விட்ட
போகர்
அதைப்
பாட்டாகவே
எழுதியிருக்கிறார்.

சீனமக்களை
ஏற்றிக் கொண்டு
முதலில்
30 மைல் தூரம்
பறந்திருக்கிறார்.

பின்
உலகம் சுற்றி
பல இடங்களுக்குப்
பறந்திருக்கிறார்.

ஏற்கனவே
ககனக் குளிகை
கொண்டு
தான் மட்டும் பறந்தவர்
பல்லாயிரம் மைல் 
கடந்தவர்
இப்போது
சீன மக்களுக்காகக்
'காத்தாடியை'
அர்பணித்திருக்கிறார்.

போகர்
காத்தாடி துணை
கொண்டு
போன நாடுகள்
பார்த்த சித்தர்கள்
பெற்ற பாடங்கள்
படைத்த பாடல்கள்
அதிகம்.

போகர்
ஒரு வித்தியாசமான
சித்தர்.
கற்க வேண்டியதைக்
கற்பதும்
கற்பிக்க வேண்டியதைப்
பிறருக்குக் கற்பிப்பதுமே
அவரது கல்விக்
கொள்கை.

காத்தாடி
தயாரிப்பதற்காக
அசுவினி மகரிஷியைச்
சந்தித்ததாக
புலிப்பாணியார் ஒரு
பாடல் புனைந்திருக்கிறார்.

அசுவினி மகரிஷியிடம்
ஓர்
ஆகாயப் புரவி
இருந்ததாம்.

அது
பஞ்ச லோகத்தை
உருக்கிச் செய்த
உலோகப் புரவி.

அது
பறப்பதும்
அதைப்
பார்ப்பதும்
ஒளி பொருந்திய
சிவ ரதம்
போலிருக்குமாம்.

அசுவினியைச்
சந்தித்து போகர்
தாழ் பணிந்த போது
போகரின்
பெருமைகளைத்
திறமைகளை
அசுவினி அறிந்திருந்ததால்
வாழ்த்தி - போற்றி
தான் வைத்திருந்த
ஆகாயப் புரவியையும்
அதிலிருந்த
தொழில் நுட்பத்தையும்
அதற்கேற்ற
சித்த மந்திரங்களையும்
சொல்லிக் கொடுத்தார்.

ஒருமுறை
கிஷ்கிந்த மலைக்கு
வந்து
பத்தாண்டுகள் தங்கி
திருவேலர் மகரிஷியைக்
கண்டு வணங்கி
அவரிடம்
பல வித்தைகள்
கற்றாராம்
போகர்.

கற்றதும்
பெற்றதும்
சீன தேசத்திற்கே
அர்ப்பணம் செய்தது
போகர்
குரு 
காலாங்கி நாதருக்குச்
செய்த
செய் நன்றி.
குரு காணிக்கை.

வான ரதம்
தயாரித்த 
போகர்பிரான்
அன்பர்களை
நண்பர்களை
ஏற்றிக் கொண்டு
உலகம் சுற்றி
வந்தார்.

ஆம்... 
முதன் முதலில்
உலகம் சுற்றிய 
வாலிபர்
போகர் தான்.

போகர்
ஒரு ரதம் மட்டும்
செய்யவில்லை.
பல ரதங்கள்
செய்தார்.

போகரின்
உலகப் பயணம்
அவர்
வார்த்தைகளுடன்
பயணித்தால்
சுவாரஸ்யம்
கூடும்.

'தானான ரோமாபுரி
சுற்றி வந்தேன்.
தக்காண
எண்ணாயிரம்
காதமப்பா...

வேனான சித்தர்களை
ஏற்றிக் கொண்டு
வேகமுடன்
தானடத்தி
வந்தேனப்பா...

கோடி பேர் 
சமாதி நிலை
தன்னைக் கண்டேன்
கொற்றவனாம்
ரோமாபுரி சமாதியோரம்.'

இப்படித் தொடர்கிறது
போகரின்
வான்வெளிப் பயணம்.
கலைமிகு ரோமாபுரிப்
பயணம்.

ரோமாபுரிக்கு
அடுத்து
ஜெருசலேம்
செல்கிறார்.

'பானான குருபரனை
வணங்கி யானும்
பார்க்கவே எருசலேம்
போகவென்று
மானான மாதாவைக்
காணவென்று 
வணங்கினேன் அவர் 
பாதம் தொழுதிட்டேனே! 

என்னவே யேசுவின் தன்
மகிமை மெத்த
எடுத்துரைத்தார்
சீஷர் வர்க்க
அனேகம் பேர்.'

ஜெருசலேமில்
மாதாவையும்
ஏசு பிரானையும்
தரிசனம் கண்டவர்
அடுத்து சென்றது
அரபு நாடு.

பயணத்தின் நோக்கம்
நபிகள் நாயகத்தைத்
தரிசிப்பதுதான்.
அதைப்
போகரே 
சொல்கிறார்.

‘மன்னர் மெய்ச்சு
மக்கவாம் புரியை
காண உவகையுடனே
ரதம் திருப்பி...

திண்பான முகமது
மார்க்கத்தார்கள்
சிறப்புடனே கண்டேனே
கோடி பேரே! '

மெக்காவில்
சமாதி நிலையிலிருந்த
யாகோபுவைச்
சந்தித்த போகர்
அவர் வைத்திருந்த
சந்தேகங்களைத்
தீர்த்து வைத்தார்.

அப்புறம்
அவரது பயணம்
தென் அமெரிக்கா
என்கிறது
பிறிதொரு குறிப்பு.

'யோச்சா
என்பார்
தென் அமெரிக்கா
வந்து
எண்ணற்ற
சீர்திருத்தங்கள்
செய்ததாக
கலாச்சார
மாற்றம்
ஏற்படுத்தியதாக'
எழுதி 
வைத்திருக்கிறார்
சிலி நாட்டு
வரலாற்று ஆசிரியர்
மைகாஸ்.

அந்த
யோச்சா
போகர் தான்
என்கிறது ஓர்
ஆய்வுக் குறிப்பு.

உலகம் சுற்றிய
போகர்
பாரிசையும்
விட்டு 
வைக்கவில்லை.

'பண்பான குளிகையது
பூண்டு கொண்டேன்.
பாங்கான
பாரீஸ்
சபதியைக்
கண்டேன்'
என
வியக்க வைக்கிறார்.

உலகத்தைச்
சுற்றிய
அனுபவம்
உலகாளும்
உமையவள்
வழங்கிய
ஞானம்
போகருக்கு
மட்டுமல்ல
உலகுக்கும்
பல நன்மைகள்
வழங்கின.

நிலம் ஒரு பங்கு
நீர் மூன்று பங்கு
என்று
உலக அமைப்பை
முதலில் சொன்னவர்
போகர் பெருமானே!

கடல்
பயணத்தின் போது
பாறையைக்
கண்டறிந்து
விலகிச் செல்ல
கப்பலுக்குள்
கண்ணாடி
கண்டுபிடித்து
அமைத்திருந்தார்.

இன்றைய
பெரிஸ்கோப்
போகர்
கண்டுபிடித்த
அன்றைய
போகர்ஸ்கோப்.

பீங்கானும்
கண்ணாடியும்
போகரின்
கண்டுபிடிப்புகளே!

வெப்பக்
காற்றை
நிரப்பி
உயரே பறக்கும்
பலூன்
போகரின்
கண்டு பிடிப்பே!

அதற்கு
அவர் வைத்த பெயர்
'கூண்டு வித்தை.'

பாரசூட்டிற்கும்
முன்னோடி
போகரே.

‘குடைவித்தை'
என
அறிமுகம் செய்தார்
விஞ்ஞானி போகர்.

கடலுக்கடியில்
கவச உடையோடு
சுவாசக் குழாய்
சகிதம்
செல்லும்
பாதுகாப்பு
உபகரணங்களை
அன்றே
கண்டுபிடித்தார்
போகர் பிரான்.


போகரின்
குலம் கோத்திரத்தில்
குழப்பம் உண்டு.

குலாலர்
குசவர்
விஸ்வகர்மா
எனப்
பலப்பல யூகம்.

போகரே
தன் ஜாதி
விஸ்வகர்மா
என்றும்
தன் தலைமுறைகள்
பதினெட்டு
என்றும்
ஒரு நூலில்
தெளிவுபடுத்துகிறார்.

வைகாசி மாதம்
பரணி நட்சத்திரத்தில்
தோன்றிய போகர்
12 ஆயிரம்
ஆண்டுகள்
வாழ்வாங்கு
வாழ்ந்து
வாழ்வின் நிறைவில்
இறை விருப்போடு
பழனியில்
சித்தியானார்.

தேடிய யாவும்
கிட்டிய திருப்தியில்
ஞானத் தாயின்
வழிகாட்டுதல்படி
ஞானக் குமரனின்
கிருபையால்
சகல சித்திகளோடு
தவத்தில்
ஆழ்ந்தார்.
தவ வாழ்வு
தொடர்ந்தார்.
சித்தியானார்.

காஞ்சிபுரம்
பேரூர்
சதுரகிரி
ஆகிய
ஊர்களிலும்
போகர்
சமாதி கொண்டதாகத் 
தகவல் உள்ளது.

இமயமலையில்
முக்கியமானவை
ஐந்து சிவாலயங்கள்.

சிவன் - உமைக்கு
கிரியை போதித்த
அமர்நாத்
கேதார்நாத்
பத்ரிநாத்
இம்மூன்றும்
இந்தியப் பகுதி.

திபெத், சீனா
பகுதியில்
கைலாஷ்நாத்.

நேபாளத்தில்
பசுபதிநாத்.

இவ்வைந்திலும்
போகர்
நிஷ்டையில்
அருள்பாலித்துக்
கொண்டிருக்கிறார்.

போகரைப் போன்ற
நிறை சித்தரை
இறையாகக்
கொண்டவர்
வாழ்வு செழிக்கும்.

ஞானத்தில்
புரளும்
தலைமுறையாகத்
தரணியில்
சிறக்கும்
அவர்களது
குடும்பம்.

ஓம் நமசிவாய!

(போகர் பிரான் திவ்விய சரித்திரம் - நிறைவு)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)