சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 6)
சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 6)
-மாரிமைந்தன் சிவராமன்
காவிரிக் கரையோரம்
இருந்து வரும்
நெரூரும்
வசித்து வந்த
காரணம்
இது
இறையின் தீர்மானம்.
நெரூரே
விவேக முக்தியடைய
உகந்த இடம்
எனத் தீர்மானித்தார்.
உரிய
காலத்திற்குக்
காத்திருந்தார்.
ஆழ்ந்து உணர்ந்து
சமாதிக்கான
நாளும் குறித்தார்.
அந்நாள் வந்தது.
ஊர் திரண்டிருந்தது.
அந்தணர்கள்
சூழ்ந்திருந்தனர்.
பிரம்மேந்திரரின்
தவயோக அழைப்பு
மைசூர்
புதுக்கோட்டை
தஞ்சை மன்னர்களுக்குச்
சென்றிருந்தது.
அம்மூவேந்தர்களும்
கவலையோடு
அருகிருந்தனர்.
அது
ஜேஷ்ட
சுத்த தசமி
நாள்.
தொட்டனைத்தூறும்
மணற் கேணி போல்
பறிக்கப் பறிக்க
அருளாற்றல்
பொங்கும்
ஓரிடத்தைத்
தேர்ந்தெடுத்து
சுத்தம் செய்து
சாஸ்திர விதிப்படி
அமைத்த
குழி
தயாராயிருந்தது.
அவர்
அதுநாள் வரை
பேசக்
கேட்டார்
எவருமில்லை.
பேச
என்ன இருக்கிறது?
குனிந்த படி
வந்தவர்
குறிப்பேதும்
காட்டவில்லை.
ஓரிரு நாள்
முன்னர்
ஜீவசமாதிக்கு
நாள் குறித்தபோது ...
அருகிருந்த
அந்தணர்களிடம்
'காசியிலிருந்து
ஒரு
பிராமணர்
பாணலிங்கம்
கொண்டு வருவார்.
இங்கு ஓர்
இடத்தில்
வில்வ மரச்செடி ஒன்று
துளிர்த்து
வெளிவந்திடும்.
அவ்விடமே
நான்
சமாதி கொள்ளும்
ஞானபீடம்.
அதன் அருகே
பாணலிங்கத்தை
12 அடி
கீழ்ப்புறம் வைத்துப்
ஒரு ஞானி
ஜீவசமாதி அடைவதைக்
கண்ணுறுவது
புண்ணியங்களில்
மேலானது.
எனவே
பக்தர்கள் கூட்டம்
நிரம்பியிருந்தது.
அதோ...!
மைசூர் மன்னர்,
புதுக்கோட்டைத்
தொண்டைமான்,
தஞ்சை அரசர்,
ஆயிரமாயிரம்
அந்தணர்
மற்றும்
பல்லாயிரம் பக்தர்கள்.
நேரம்
நெருங்கிக்
கொண்டிருந்தது.
குனிந்து வந்தவர்
தலை தூக்கி
சுற்றி ஒருமுறை
பார்த்தார்.
லேசான
புன்னகை
முகத்தில்
பூத்தது.
அக்கணத்தில்
அந்த
ஞானக் குழிக்குள்
இறங்கினார்
நம் ஞானி.
தலைக்கு மேலே
இரு கரம் கூப்பி
கூட்டம்
கும்பிட்டது.
பக்தர்களின்
கண்களில்
பரவசம்
கண்ணீர்...
குழிக்குள் இறங்கிய
பிரம்மேந்திரர்
அடுத்த நிகழ்வுக்கு
சமிக்ஞை செய்தார்.
சாஸ்திர சம்பிரதாயம்
தொடர
அக்கணமே
உலகத் தொடர்பை
அறுத்துக் கொண்டார்
அருளாளர்.
அமைதி..
அப்படி ஒரு
அமைதி.
தந்தை
தூக்கி - அவர்
தலையில்
அமர்ந்து
வேடிக்கை
பார்த்துக்
கொண்டிருந்த
சின்னஞ் சிறுவன்
ஒருவன்
அமைதியைக்
குலைத்தான்.
பிரம்மேந்திரரைச்
சூழ்ந்திருந்த
பிராமணர்களைப்
பார்த்துக் கத்தினான்.
"அந்த
தாத்தாவை
என்ன
பண்றீங்க...?
நல்ல தாத்தா.."
அதே கணத்தில்
இருநூறாண்டு கால
அவதூதர்
உருவிலிருந்த
பிரம்மேந்திரர்
இறையோடு
இறையாகக்
கலந்திருந்தார்.
சிறுவனின்
குரல்
அவருக்குக்
கண்டிப்பாய்
கேட்டிருக்கும்.
அச்சிறுவன்
மதுரைத்
திருவிழாவிற்கு
மகான்
அழைத்துச் சென்ற
குட்டித் தோழனாய்
இருக்கும்!
பிரம்மேந்திரர்
சொல்லியிருந்தபடியே
ஒன்பதாம் நாள்
காசி பிராமணர்
வந்தார்.
பாணலிங்கம்
தந்தார்.
உரிய நாளில்
வெகு விமர்சையாக
பிரதிஷ்டை ஆனார்
காசி விஸ்வநாதர்.
பிரம்மேந்திரரின்
அணுக்கத் தொண்டர்
புதுக்கோட்டை மன்னர்
தொண்டைமான்
அங்கு
கோயிலே
கட்டினார்.
பொதுவாக
ஜீவசமாதி
அடைந்த
இடத்திலேயே
கோயில் அமைப்பது
வழக்கம்.
ஆனால்
நெரூரில்
பிரம்மேந்திரர்
வழி காட்டியபடி
12 அடி
தள்ளியே
கோயில்
அமைந்துள்ளது.
பிரம்மேந்திரரின்
ஜீவசமாதி
வெட்ட வெளியில்
வில்வ மரத்தடியில்
பிரம்மாண்டமாய்
தவச் சூழலில்
இன்றும்
அருள் பாலித்துக்
கொண்டிருக்கிறது.
அன்றாட
பூஜைகள்
தடைப்படாமல் இருக்க
இன்றும்
நெரூர்
சதாசிவ பிரம்மேந்திரர்
ஆலயப்
பராமரிப்பு செய்வது
புதுக்கோட்டை மன்னர்
குடும்பமே!
பிரம்மேந்திரர்
மந்திரம் அருளிய
மணல்
ஒரு பேழையில்
ராஜ மரியாதையோடு
அருகிருக்கும்
சன்னதிக்கு அருகில்
பிரம்மேந்திரரின்
அருள் நிறை சிலை
வழிபாட்டுக்கிருக்கிறது.
ஆம்....!
புதுக்கோட்டை
பிரகதாம்பாள்
கோயிலில்
வழிபாட்டுக்கு
வீற்றிருக்கிறது.
கடுந்துறவு
நுண்ணறிவு
அருந்தவம்
மகா சமாதி
இவையே
பிரம்மேந்திரர்.
நெரூரில்
ஜீவ சமாதி அடைந்த
பிரம்மேந்திரர்
மானாமதுரையிலும்
கராச்சியிலும்
சித்தி அடைந்ததாக
திவ்விய சரித்திரம்
நிறைவு கொள்ளும்.
ஸ்தூல உடலை
நெரூரிலும்
சூட்சம சரீரத்தை
மானா மதுரையிலும்
காரண தேகத்தைக்
கராச்சியிலும்
சித்தியடைய வைத்ததாக
பிரமிப்பூட்டும்.
நெரூரில்
தஞ்சை,
புதுக்கோட்டை,
மைசூர் மன்னர்களும்
மானா மதுரையில்
ஒரு சாஸ்திரியும்
கராச்சியில்
ஒரு முஸ்லிம் அன்பரும்
சித்தியடைவதை
காணும் பாக்கியம்
வேண்டியிருந்ததால்
முத்தேக சித்தியை
வெளிப்படுத்தியதாக
வரலாறு விரியும்.
இத்தலங்களில்
அருளாற்றல்
நிறைந்த
நெரூர்
ஓர்
அற்புத
ஆன்மிக பூமி.
பிரம்மேந்திரர்
விரும்பிச்
சித்தியடைந்த
அருள் பூமி !
பொதுவாக
சிருங்கேரி
பீடாதிபதியாக
அமர்பவர்கள்
தத்துவ
ஞான சாஸ்திரம்
கசடறக் கற்றவர்களாக
இருப்பார்கள்.
இறைவி
வாணி தேவியே
தக்கதொரு
பீடாதிபதியைத்
தேர்வு செய்து
'இன்ன இடத்தில்
இப்படி ஒருவன்
இருக்கிறான்'
என்று
அடையாளம்
காட்டுவாள்.
இயல்பிலேயே
கல்வி கேள்விகளில்
சிறந்திருப்பார்
அன்னை
அடையாளம் காட்டியவர்.
காரணம்,
முற்பிறப்புக் கல்வியும்
முழுமையாக அவரிடம்
நிறைந்திருக்கும்.
பீடாதிபதியாக
அமரும்
தருணத்திலேயே
64 கலைகளும்
அவர்களுக்கு
அத்துபடியாயிருக்கும்
என்பது
ஆதிசங்கரர்
அருளிய வாக்கு.
அப்படி
குரு அருளோடு
திரு அருளோடு
பீடாதிபதியானவர்
சச்சிதானந்த சுவாமி
நவநரசிம்ம பாரதி
மகா சுவாமிகள்.
அப்பெரும்
சுவாமிகளுக்கு
பரிச யோக சித்தியில்
சில கேள்விகள் இருந்தன.
நூல்கள் பல
நுழைந்த போது
நெரூரில்
ஜீவ சமாதியிலிருக்கும்
சதாசிவ பிரம்மேந்திரரே
சர்வ வல்லமை
கொண்டவர் என்பதை
சுவாமிகள்
அறிய நேர்ந்தது.
அவரிடம்
அடைக்கலமானால்
அனைத்தும் புரிய வரும்.
எதிலும் தெளிவு வரும்
என
நூல்கள் சொல்லின.
பிரம்மேந்திரர்
ஐக்கியமாயிருக்கும்
நெரூர்
புறப்பட்டார்
சிருங்கேரி
மகா சுவாமிகள்.
நீண்ட
பல்லக்குப் பயணம்.
சிருங்கேரி
பீடத்தின் கிளை
கரூர் அருகே
மாயனூரில்
உண்டு.
அங்கு தங்கி
நெரூர் செல்ல
பாதை விசாரித்துப்
பயணம் தொடங்கினார்.
அமராவதி நதியின்
வட கரை
அரங்கநாதப்பேட்டை.
மகா சுவாமிகளுக்கு
ஒன்று புரிந்தது.
‘இது
பிரம்மேந்திரர்
அனுகிரகம்.
நுழைவுச் சீட்டு
கிடைத்துவிட்டது.
பல்லக்குப் பயணம்
வீண் பகட்டு.
நடைப்பயணமே
நாயகன்
உணர்த்துவது.
உடனே
பல்லக்கிலிருந்து
பாங்காக இறங்கி
பாதங்களைப்
படர விட்டார்
திவ்விய திருத்தலம்
நோக்கி.
அவரது
ஒவ்வொரு அடியும்
ஆசி வேண்டி
அடி பணிந்தது.
நெரூர் திசை நோக்கி
நமஸ்காரம்
செய்தார்
பின் -
தன் கை நீட்டும்
தூரம் நடந்து
மீண்டும்
நமஸ்கரித்தார்.
இப்படியே
ஒன்றரை மைல்
வணங்கியபடியே
வந்தவர்
கண்களில்
காவிரிக் கரையோரம்
தவத் துயில்
பெற்றிருக்கும்
பிரம்மேந்திரர்
ஜீவசமாதி
பேரொளியாய்ப்
பட்டது.
நல்ல நாளிலேயே
பிரம்மேந்திரர்
பேசப் போவதில்லை.
ஜீவ சமாதியில்
இருப்பவரா
பேசப் போகிறார்?
மகா சுவாமிகளும்
விடப் போவதில்லை
சந்தேகம் தீராமல்
திரும்பப் போவதில்லை.
காலையில்
காவிரியில்
குளித்து விட்டு
பூஜை புனஸ்காரங்கள்
முடித்துவிட்டு
பிரம்மேந்திரரின்
சமாதி உள்ள
விதையில்லா
வில்வமர மேடையில்
அமர்வார்.
கனிந்துருகிக்
காத்திருப்பார்.
ஊன் உறக்கமின்றி
கண் மூடி
தியானித்திருப்பார்.
ஆயிற்று
மூன்று நாட்கள்.
மூன்று நாட்களுக்குள்
சிருங்கேரி சுவாமிகள்
நெரூரில்
முகாமிட்டிருப்பது
செய்தியாகிவிட
சாஸ்திரிகளும்
ஆன்றோர்களும்
அந்தணர்களும்
பக்த கோடிகளும்
பெருமளவில்
கூட
கோயிலில்
களை கட்டி இருந்தது.
மூன்றாம் நாள்...
அந்த அமைதியான
ஆன்மிகச் சூழலில்
பேசும் சத்தம் மட்டும்
மதிலுக்கு அப்பால் இருந்த
அனைவருக்கும்
கேட்டது.
என்னவென்று
புரியும்
பாக்கியம் தான்
அவர்களுக்கு
வாய்க்கவில்லை.
ஒரு ஞானி
பேசமாட்டார்.
இன்னொரு ஞானி
அதிர்ந்து பேசமாட்டார்.
பின் எப்படி
உள்ளே இருந்து
பேசும் சத்தம்?
அது
இரு ஆன்மாக்களின்
மௌன ஒலி!
ஆன்மிகப் பேரலையின்
அந்தரங்க
உரை வீச்சு.
இறைப்பேச்சு.
நீண்ட
சம்பாஷணைக்குப்
பிறகு
சிருங்கேரி சுவாமிகளின்
காந்தக் குரல்
தோத்திரங்களில்
கலந்து ஒலித்தது.
சிருங்கேரி
சுவாமிகள்
வெளியே வந்தார்.
முகத்தில்
சந்தேகங்கள் தீர்ந்த
தெளிவு.
உவமையில்லாப்
பேரொளி.
அந்தணர்கள்
சூழ்ந்து
நடந்ததறிய
முயன்றனர்.
அட...
என்ன
ஆச்சரியம்!
இப்போது
மகா சுவாமிகளிடம்
பேச்சில்லை.
அமைதியின்
உறைவிடமாய்
அனைவருக்கும்
ஆசி தந்துவிட்டு,
கோயிலை
வணங்கிவிட்டுப்
புறப்பட்டார்
சிருங்கேரி சுவாமிகள்.
அவர்
திருக்கரங்களில்
கத்தை கத்தையாகத்
தாள்கள்.
அவை
சிருங்கேரி சுவாமிகள்
பிரம்மேந்திரரைத்
துதித்துப்
பாடிய
தேனமுதப் பாக்கள்.
இன்னொரு
கையில்
ஓர்
அழகிய படம்
ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அது
நம்
திகம்பர சுவாமிகள்
சதாசிவ பிரம்மத்தின்
திருவுருவப் படம்.
மகா சுவாமிகள்
மகிழ்வோடு
தெளிவோடு
புறப்பட்டார்.
அவர் எழுதிய
அந்த
45 துதிப் பாடல்கள்
பிரம்மேந்திரர்
புகழை இன்றும்
பாடிக்
கொண்டிருக்கின்றன.
அவரது
பல்லக்கில்
எப்போதும்
பிரம்மேந்திரரின்
திருவுருவப் படம்
உடனிருந்து
வழி காட்ட
ஆரம்பித்தது.
அது சரி!
அப்படம்
எப்படி
சிருங்கேரி சுவாமிகளுக்குக்
கிடைத்தது ?
யார்
கொடுத்தது?
அது
பிரம்மேந்திரருக்கும்
சிருங்கேரி
பீடாதிபதிக்குமே
வெளிச்சம்!
அது முதல்
இன்று வரை
சிருங்கேரி
பல்லக்கில்
சீரோடும் சிறப்போடும்
பிரம்மேந்திரர்
ஒளிப்படமாய்
பவனி வருவது
வழக்கமாகிப் போனது.
இது நடந்து
சுமார்
150 வருடங்கள்
இருக்கலாம்.
இச் சம்பவம்
தொடர்ந்து
இன்று வரை
சிருங்கேரி பீடத்திற்கும்
நெரூர் மடத்திற்கும்
உள்ள தொடர்பு
தொடர்ந்து வருகிறது.
இன்று வரை
சிருங்கேரி பீடத்தின்
பட்டத்திற்கு
வரும்
ஆச்சாரியார்
நெரூர் வந்து
பிரம்மேந்திரரை
வணங்கித் துதித்து
அவர் ஆசியோடு தான்
பதவி ஏற்கிறார்கள்.
அதுபோது
சிருங்கேரியிலிருந்தே
பூஜை சாமான்கள்
வரும்.
காவிரித் தீர்த்தமும்
நெரூர்ப் பகுதி பாலுமே
அவர்கள்
நெரூரில் பெறுவது.
அருமைகளும்
பெருமைகளும்
கொண்ட
பிரம்மேந்திரரை
வணங்கி நிற்போம்.
மும்மலங்கள்
மறைந்து போகும்.
விடுதலையோ
வீடு பேறோ
முத்தியோ
சித்தியோ
தேடி வரும்!
இருந்து வரும்
நெரூரும்
வசித்து வந்த
நெரூர் மக்களுமே
சதாசிவ பிரம்மேந்திரரின்
ஆன்மீக நெஞ்சில்
நிறைந்து இருந்தனர்.
மக்களின் மனங்களில்
மகான் வீற்றிருந்தார்.
சதாசிவ பிரம்மேந்திரரின்
ஆன்மீக நெஞ்சில்
நிறைந்து இருந்தனர்.
மக்களின் மனங்களில்
மகான் வீற்றிருந்தார்.
காரணம்
இது
இறையின் தீர்மானம்.
நெரூரே
விவேக முக்தியடைய
உகந்த இடம்
எனத் தீர்மானித்தார்.
உரிய
காலத்திற்குக்
காத்திருந்தார்.
ஆழ்ந்து உணர்ந்து
சமாதிக்கான
நாளும் குறித்தார்.
அந்நாள் வந்தது.
ஊர் திரண்டிருந்தது.
அந்தணர்கள்
சூழ்ந்திருந்தனர்.
பிரம்மேந்திரரின்
தவயோக அழைப்பு
மைசூர்
புதுக்கோட்டை
தஞ்சை மன்னர்களுக்குச்
சென்றிருந்தது.
அம்மூவேந்தர்களும்
கவலையோடு
அருகிருந்தனர்.
அது
ஜேஷ்ட
சுத்த தசமி
நாள்.
தொட்டனைத்தூறும்
மணற் கேணி போல்
பறிக்கப் பறிக்க
அருளாற்றல்
பொங்கும்
ஓரிடத்தைத்
தேர்ந்தெடுத்து
சுத்தம் செய்து
சாஸ்திர விதிப்படி
அமைத்த
குழி
தயாராயிருந்தது.
பிரம்மேந்திரர்
மெல்லக் குனிந்தபடி
நடந்து வந்தார்.
மெல்லக் குனிந்தபடி
நடந்து வந்தார்.
அவர்
அதுநாள் வரை
பேசக்
கேட்டார்
எவருமில்லை.
பேச
என்ன இருக்கிறது?
குனிந்த படி
வந்தவர்
குறிப்பேதும்
காட்டவில்லை.
ஓரிரு நாள்
முன்னர்
ஜீவசமாதிக்கு
நாள் குறித்தபோது ...
அருகிருந்த
அந்தணர்களிடம்
'காசியிலிருந்து
ஒரு
பிராமணர்
பாணலிங்கம்
கொண்டு வருவார்.
இங்கு ஓர்
இடத்தில்
வில்வ மரச்செடி ஒன்று
துளிர்த்து
வெளிவந்திடும்.
அவ்விடமே
நான்
சமாதி கொள்ளும்
ஞானபீடம்.
அதன் அருகே
பாணலிங்கத்தை
12 அடி
கீழ்ப்புறம் வைத்துப்
பிரதிஷ்டை
செய்ய வேண்டும்'
என்று
ஆணையாக
உணர்த்தியிருந்தார்.
செய்ய வேண்டும்'
என்று
ஆணையாக
உணர்த்தியிருந்தார்.
ஒரு ஞானி
ஜீவசமாதி அடைவதைக்
கண்ணுறுவது
புண்ணியங்களில்
மேலானது.
எனவே
பக்தர்கள் கூட்டம்
நிரம்பியிருந்தது.
அதோ...!
மைசூர் மன்னர்,
புதுக்கோட்டைத்
தொண்டைமான்,
தஞ்சை அரசர்,
ஆயிரமாயிரம்
அந்தணர்
மற்றும்
பல்லாயிரம் பக்தர்கள்.
நேரம்
நெருங்கிக்
கொண்டிருந்தது.
குனிந்து வந்தவர்
தலை தூக்கி
சுற்றி ஒருமுறை
பார்த்தார்.
லேசான
புன்னகை
முகத்தில்
பூத்தது.
அக்கணத்தில்
அந்த
ஞானக் குழிக்குள்
இறங்கினார்
நம் ஞானி.
தலைக்கு மேலே
இரு கரம் கூப்பி
கூட்டம்
கும்பிட்டது.
பக்தர்களின்
கண்களில்
பரவசம்
கண்ணீர்...
குழிக்குள் இறங்கிய
பிரம்மேந்திரர்
அடுத்த நிகழ்வுக்கு
சமிக்ஞை செய்தார்.
சாஸ்திர சம்பிரதாயம்
தொடர
அக்கணமே
உலகத் தொடர்பை
அறுத்துக் கொண்டார்
அருளாளர்.
அமைதி..
அப்படி ஒரு
அமைதி.
தந்தை
தூக்கி - அவர்
தலையில்
அமர்ந்து
வேடிக்கை
பார்த்துக்
கொண்டிருந்த
சின்னஞ் சிறுவன்
ஒருவன்
அமைதியைக்
குலைத்தான்.
பிரம்மேந்திரரைச்
சூழ்ந்திருந்த
பிராமணர்களைப்
பார்த்துக் கத்தினான்.
"அந்த
தாத்தாவை
என்ன
பண்றீங்க...?
நல்ல தாத்தா.."
அதே கணத்தில்
இருநூறாண்டு கால
அவதூதர்
உருவிலிருந்த
பிரம்மேந்திரர்
இறையோடு
இறையாகக்
கலந்திருந்தார்.
சிறுவனின்
குரல்
அவருக்குக்
கண்டிப்பாய்
கேட்டிருக்கும்.
அச்சிறுவன்
மதுரைத்
திருவிழாவிற்கு
மகான்
அழைத்துச் சென்ற
குட்டித் தோழனாய்
இருக்கும்!
பிரம்மேந்திரர்
சொல்லியிருந்தபடியே
ஒன்பதாம் நாள்
காசி பிராமணர்
வந்தார்.
பாணலிங்கம்
தந்தார்.
உரிய நாளில்
வெகு விமர்சையாக
பிரதிஷ்டை ஆனார்
காசி விஸ்வநாதர்.
பிரம்மேந்திரரின்
அணுக்கத் தொண்டர்
புதுக்கோட்டை மன்னர்
தொண்டைமான்
அங்கு
கோயிலே
கட்டினார்.
பொதுவாக
ஜீவசமாதி
அடைந்த
இடத்திலேயே
கோயில் அமைப்பது
வழக்கம்.
ஆனால்
நெரூரில்
பிரம்மேந்திரர்
வழி காட்டியபடி
12 அடி
தள்ளியே
கோயில்
அமைந்துள்ளது.
பிரம்மேந்திரரின்
ஜீவசமாதி
வெட்ட வெளியில்
வில்வ மரத்தடியில்
பிரம்மாண்டமாய்
தவச் சூழலில்
இன்றும்
அருள் பாலித்துக்
கொண்டிருக்கிறது.
அன்றாட
பூஜைகள்
தடைப்படாமல் இருக்க
புதுக்கோட்டை
சமஸ்தானத்திலிருக்கும்
இரண்டு
கிராமங்களை
மானியமாக
வழங்கினார்
தொண்டைமான்.
சமஸ்தானத்திலிருக்கும்
இரண்டு
கிராமங்களை
மானியமாக
வழங்கினார்
தொண்டைமான்.
இன்றும்
நெரூர்
சதாசிவ பிரம்மேந்திரர்
ஆலயப்
பராமரிப்பு செய்வது
புதுக்கோட்டை மன்னர்
குடும்பமே!
பிரம்மேந்திரர்
மந்திரம் அருளிய
மணல்
ஒரு பேழையில்
ராஜ மரியாதையோடு
அருகிருக்கும்
சன்னதிக்கு அருகில்
பிரம்மேந்திரரின்
அருள் நிறை சிலை
வழிபாட்டுக்கிருக்கிறது.
ஆம்....!
புதுக்கோட்டை
பிரகதாம்பாள்
கோயிலில்
வழிபாட்டுக்கு
வீற்றிருக்கிறது.
கடுந்துறவு
நுண்ணறிவு
அருந்தவம்
மகா சமாதி
இவையே
பிரம்மேந்திரர்.
விஷய ஞானமுள்ள
ஆன்மிக உலகே
ஆன்மிக யோகியை
நாடி ஓடி வருதல்
பாடித் தவமிருந்து
பாக்கியம் பெறுதல்
சிலருக்கே
தெரிந்திருக்கும்
ஞான ரகசியம்.
ஆன்மிக உலகே
ஆன்மிக யோகியை
நாடி ஓடி வருதல்
பாடித் தவமிருந்து
பாக்கியம் பெறுதல்
சிலருக்கே
தெரிந்திருக்கும்
ஞான ரகசியம்.
நெரூரில்
ஜீவ சமாதி அடைந்த
பிரம்மேந்திரர்
மானாமதுரையிலும்
கராச்சியிலும்
சித்தி அடைந்ததாக
திவ்விய சரித்திரம்
நிறைவு கொள்ளும்.
ஸ்தூல உடலை
நெரூரிலும்
சூட்சம சரீரத்தை
மானா மதுரையிலும்
காரண தேகத்தைக்
கராச்சியிலும்
சித்தியடைய வைத்ததாக
பிரமிப்பூட்டும்.
நெரூரில்
தஞ்சை,
புதுக்கோட்டை,
மைசூர் மன்னர்களும்
மானா மதுரையில்
ஒரு சாஸ்திரியும்
கராச்சியில்
ஒரு முஸ்லிம் அன்பரும்
சித்தியடைவதை
காணும் பாக்கியம்
வேண்டியிருந்ததால்
முத்தேக சித்தியை
வெளிப்படுத்தியதாக
வரலாறு விரியும்.
இத்தலங்களில்
அருளாற்றல்
நிறைந்த
நெரூர்
ஓர்
அற்புத
ஆன்மிக பூமி.
பிரம்மேந்திரர்
விரும்பிச்
சித்தியடைந்த
அருள் பூமி !
சிருங்கேரி
சாரதா பீடத்திற்கும்
நெரூர்
சதாசிவ பிரமேந்திரர்
ஜீவசமாதிக்கும்
ஓர்
ஆத்மார்த்த தொடர்பு
உண்டு.
சாரதா பீடத்திற்கும்
நெரூர்
சதாசிவ பிரமேந்திரர்
ஜீவசமாதிக்கும்
ஓர்
ஆத்மார்த்த தொடர்பு
உண்டு.
பொதுவாக
சிருங்கேரி
பீடாதிபதியாக
அமர்பவர்கள்
தத்துவ
ஞான சாஸ்திரம்
கசடறக் கற்றவர்களாக
இருப்பார்கள்.
இறைவி
வாணி தேவியே
தக்கதொரு
பீடாதிபதியைத்
தேர்வு செய்து
'இன்ன இடத்தில்
இப்படி ஒருவன்
இருக்கிறான்'
என்று
அடையாளம்
காட்டுவாள்.
இயல்பிலேயே
கல்வி கேள்விகளில்
சிறந்திருப்பார்
அன்னை
அடையாளம் காட்டியவர்.
காரணம்,
முற்பிறப்புக் கல்வியும்
முழுமையாக அவரிடம்
நிறைந்திருக்கும்.
பீடாதிபதியாக
அமரும்
தருணத்திலேயே
64 கலைகளும்
அவர்களுக்கு
அத்துபடியாயிருக்கும்
என்பது
ஆதிசங்கரர்
அருளிய வாக்கு.
அப்படி
குரு அருளோடு
திரு அருளோடு
பீடாதிபதியானவர்
சச்சிதானந்த சுவாமி
நவநரசிம்ம பாரதி
மகா சுவாமிகள்.
அப்பெரும்
சுவாமிகளுக்கு
பரிச யோக சித்தியில்
சில கேள்விகள் இருந்தன.
நூல்கள் பல
நுழைந்த போது
நெரூரில்
ஜீவ சமாதியிலிருக்கும்
சதாசிவ பிரம்மேந்திரரே
சர்வ வல்லமை
கொண்டவர் என்பதை
சுவாமிகள்
அறிய நேர்ந்தது.
அவரிடம்
அடைக்கலமானால்
அனைத்தும் புரிய வரும்.
எதிலும் தெளிவு வரும்
என
நூல்கள் சொல்லின.
பிரம்மேந்திரர்
ஐக்கியமாயிருக்கும்
நெரூர்
புறப்பட்டார்
சிருங்கேரி
மகா சுவாமிகள்.
நீண்ட
பல்லக்குப் பயணம்.
சிருங்கேரி
பீடத்தின் கிளை
கரூர் அருகே
மாயனூரில்
உண்டு.
அங்கு தங்கி
நெரூர் செல்ல
பாதை விசாரித்துப்
பயணம் தொடங்கினார்.
அமராவதி நதியின்
வட கரை
அரங்கநாதப்பேட்டை.
அங்கு
பயணம் தடைப்பட்டது.
பயணம் தடைப்பட்டது.
பல்லக்குத் தூக்கிகள்
யாரோ
தள்ளுவது
போலிருப்பதாகச்
சொன்னார்கள்.
யாரோ
தள்ளுவது
போலிருப்பதாகச்
சொன்னார்கள்.
மகா சுவாமிகளுக்கு
ஒன்று புரிந்தது.
‘இது
பிரம்மேந்திரர்
அனுகிரகம்.
நுழைவுச் சீட்டு
கிடைத்துவிட்டது.
பல்லக்குப் பயணம்
வீண் பகட்டு.
நடைப்பயணமே
நாயகன்
உணர்த்துவது.
உடனே
பல்லக்கிலிருந்து
பாங்காக இறங்கி
பாதங்களைப்
படர விட்டார்
திவ்விய திருத்தலம்
நோக்கி.
அவரது
ஒவ்வொரு அடியும்
ஆசி வேண்டி
அடி பணிந்தது.
நெரூர் திசை நோக்கி
நமஸ்காரம்
செய்தார்
பின் -
தன் கை நீட்டும்
தூரம் நடந்து
மீண்டும்
நமஸ்கரித்தார்.
இப்படியே
ஒன்றரை மைல்
வணங்கியபடியே
வந்தவர்
கண்களில்
காவிரிக் கரையோரம்
தவத் துயில்
பெற்றிருக்கும்
பிரம்மேந்திரர்
ஜீவசமாதி
பேரொளியாய்ப்
பட்டது.
நல்ல நாளிலேயே
பிரம்மேந்திரர்
பேசப் போவதில்லை.
ஜீவ சமாதியில்
இருப்பவரா
பேசப் போகிறார்?
மகா சுவாமிகளும்
விடப் போவதில்லை
சந்தேகம் தீராமல்
திரும்பப் போவதில்லை.
காலையில்
காவிரியில்
குளித்து விட்டு
பூஜை புனஸ்காரங்கள்
முடித்துவிட்டு
பிரம்மேந்திரரின்
சமாதி உள்ள
விதையில்லா
வில்வமர மேடையில்
அமர்வார்.
கனிந்துருகிக்
காத்திருப்பார்.
ஊன் உறக்கமின்றி
கண் மூடி
தியானித்திருப்பார்.
ஆயிற்று
மூன்று நாட்கள்.
மூன்று நாட்களுக்குள்
சிருங்கேரி சுவாமிகள்
நெரூரில்
முகாமிட்டிருப்பது
செய்தியாகிவிட
சாஸ்திரிகளும்
ஆன்றோர்களும்
அந்தணர்களும்
பக்த கோடிகளும்
பெருமளவில்
கூட
கோயிலில்
களை கட்டி இருந்தது.
மூன்றாம் நாள்...
அந்த அமைதியான
ஆன்மிகச் சூழலில்
பேசும் சத்தம் மட்டும்
மதிலுக்கு அப்பால் இருந்த
அனைவருக்கும்
கேட்டது.
என்னவென்று
புரியும்
பாக்கியம் தான்
அவர்களுக்கு
வாய்க்கவில்லை.
ஒரு ஞானி
பேசமாட்டார்.
இன்னொரு ஞானி
அதிர்ந்து பேசமாட்டார்.
பின் எப்படி
உள்ளே இருந்து
பேசும் சத்தம்?
அது
இரு ஆன்மாக்களின்
மௌன ஒலி!
ஆன்மிகப் பேரலையின்
அந்தரங்க
உரை வீச்சு.
இறைப்பேச்சு.
நீண்ட
சம்பாஷணைக்குப்
பிறகு
சிருங்கேரி சுவாமிகளின்
காந்தக் குரல்
தோத்திரங்களில்
கலந்து ஒலித்தது.
சிருங்கேரி
சுவாமிகள்
வெளியே வந்தார்.
முகத்தில்
சந்தேகங்கள் தீர்ந்த
தெளிவு.
உவமையில்லாப்
பேரொளி.
அந்தணர்கள்
சூழ்ந்து
நடந்ததறிய
முயன்றனர்.
அட...
என்ன
ஆச்சரியம்!
இப்போது
மகா சுவாமிகளிடம்
பேச்சில்லை.
அமைதியின்
உறைவிடமாய்
அனைவருக்கும்
ஆசி தந்துவிட்டு,
கோயிலை
வணங்கிவிட்டுப்
புறப்பட்டார்
சிருங்கேரி சுவாமிகள்.
அவர்
திருக்கரங்களில்
கத்தை கத்தையாகத்
தாள்கள்.
அவை
சிருங்கேரி சுவாமிகள்
பிரம்மேந்திரரைத்
துதித்துப்
பாடிய
தேனமுதப் பாக்கள்.
இன்னொரு
கையில்
ஓர்
அழகிய படம்
ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அது
நம்
திகம்பர சுவாமிகள்
சதாசிவ பிரம்மத்தின்
திருவுருவப் படம்.
மகா சுவாமிகள்
மகிழ்வோடு
தெளிவோடு
புறப்பட்டார்.
அவர் எழுதிய
அந்த
45 துதிப் பாடல்கள்
பிரம்மேந்திரர்
புகழை இன்றும்
பாடிக்
கொண்டிருக்கின்றன.
அவரது
பல்லக்கில்
எப்போதும்
பிரம்மேந்திரரின்
திருவுருவப் படம்
உடனிருந்து
வழி காட்ட
ஆரம்பித்தது.
அது சரி!
அப்படம்
எப்படி
சிருங்கேரி சுவாமிகளுக்குக்
கிடைத்தது ?
யார்
கொடுத்தது?
அது
பிரம்மேந்திரருக்கும்
சிருங்கேரி
பீடாதிபதிக்குமே
வெளிச்சம்!
அது முதல்
இன்று வரை
சிருங்கேரி
பல்லக்கில்
சீரோடும் சிறப்போடும்
பிரம்மேந்திரர்
ஒளிப்படமாய்
பவனி வருவது
வழக்கமாகிப் போனது.
இது நடந்து
சுமார்
150 வருடங்கள்
இருக்கலாம்.
இச் சம்பவம்
தொடர்ந்து
இன்று வரை
சிருங்கேரி பீடத்திற்கும்
நெரூர் மடத்திற்கும்
உள்ள தொடர்பு
தொடர்ந்து வருகிறது.
இன்று வரை
சிருங்கேரி பீடத்தின்
பட்டத்திற்கு
வரும்
ஆச்சாரியார்
நெரூர் வந்து
பிரம்மேந்திரரை
வணங்கித் துதித்து
அவர் ஆசியோடு தான்
பதவி ஏற்கிறார்கள்.
அதுபோது
சிருங்கேரியிலிருந்தே
பூஜை சாமான்கள்
வரும்.
காவிரித் தீர்த்தமும்
நெரூர்ப் பகுதி பாலுமே
அவர்கள்
நெரூரில் பெறுவது.
அருமைகளும்
பெருமைகளும்
கொண்ட
பிரம்மேந்திரரை
வணங்கி நிற்போம்.
மும்மலங்கள்
மறைந்து போகும்.
விடுதலையோ
வீடு பேறோ
முத்தியோ
சித்தியோ
தேடி வரும்!
ஓம் நமசிவாய!
(சதாசிவ பிரம்மேந்திரர் திவ்விய சரித்திரம் - முற்றும்)
பிரம்மேந்திரர் என்னும் மிகப்பெரிய ஞான மலையின் அற்புத திவ்விய சரித்திரம் படித்து மகிழ்ந்தோம். இதுவரை அவரைப் பற்றி அறியாத பல விஷயங்களை உணர்ந்து கொண்டோம். நல்லதொரு காவியத்தைப் படைத்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றிங்க
பதிலளிநீக்குமாரிமைந்தா
பதிலளிநீக்குஉன் தாயும் உன் தந்தையும், மாஹா புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
அழகு தமிழில்
பிழை இல்லாமல்
பிரமேந்திரை பற்றி மேம்பட்டு மிக அறிய, வெழி உலகம் அறியாத பதிவை
பதிவிட்டமைக்கு நன்றி நவிழ்கிறோம்.