சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 3)
சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 3)
-மாரிமைந்தன் சிவராமன்
குரு மடத்திலிருந்து
குருவிடம் இருந்து
விடைபெற்ற
பிரம்மேந்திரர்
வீணே
ஆடைகள்
எதற்கு
என்று
உடைகளுக்கும்
விடை கொடுத்தார்.
திகம்பரராகவே
அலைந்தார்.
நிர்வாணமாகவே
திரிந்தார்.
மக்கள்
நடமாட்டமில்லாத
சமதரைப் பகுதி
மலை உச்சி
நதிக்கரை
அழகிய வனம்
அவரது
வாசஸ்தலங்கள்
ஆயின.
திருமூலர்
சொல்லியிருந்த
யோகங்களில்
கரை கண்டார்.
எல்லா
சித்திகளும்
கை கூடின.
தன்னிலை
மறந்தது
அதில் ஒன்று.
ஆகாயத்தில் பறந்தார்.
பிறர் கண்களுக்குப்
புலப்படாமல்
பயணித்தார்.
மண்ணுக்குள்ளேயும்
புதையுண்டு கிடந்தார்.
அவர்
நிகழ்த்திய
அற்புதங்களும்
அதி அற்புதமானவை.
எவையும்
திட்டமிட்டவை அல்ல.
அவை
சித்தாடலை
உலகுக்குக் காட்டும்
வீண் விளம்பரமல்ல.
உடலுணர்வு
இன்றி
வெட்கம்
துக்கம்
மகிழ்வு
ஏதுமின்றி
ஏகாந்த நிலையில்
இருந்து வந்தார்.
ஆம்....
அவர் பாட்டுக்கு
அவர் இருந்தார்.
அது தானே
சித்தர் போக்கு!
உடல் உணர்வு
அற்ற நிலை
என்பது
பிரம்மேந்திரர்
போன்ற
ஞானிகளுக்கு
மட்டுமே
இயல்பானது.
ஒருமுறை -
கொடுமுடிக் கரையில்
சதாசிவ பிரம்மேந்திரர்
சமாதி நிலையில்
அமர்ந்திருந்தார்.
பெரும் வெள்ளம்
திடுமென வந்தது.
காவிரி
வடிந்த போது
அவரைக்
காணவில்லை.
காலம்
நகர்ந்தது.
பின்னொரு நாள்
ஆற்று மணலுக்காக
மேடு ஒன்றை
வெட்டினர்
கூலியாட்கள்.
ஓரிடத்தில்
மண் வெட்டி
தரையிறங்காது
ஏதோ
தட்டுப்பட
திகைத்து
எடுத்துப்
பார்த்த போது
மண்வெட்டியில்
ரத்தம்
சிதறியிருந்தது.
பின்
மெதுவாக
மண் அகற்ற
உள்ளே
உட்கார்ந்த நிலையில்
நிர்வாண சாமியார்...
ஆம்....
நம்
சதாசிவ பிரம்மேந்திரர்.
கண் விழித்த
பிரம்மேந்திரர்
ஏதும் நடக்காதது
போல்
இத்தனை காலம்
மண்ணிலிருந்ததை
உணராதவராய்
மெல்ல
எழுந்தார்.
இரத்தம்
வழிவது
தெரியாதவராய்
தன் பயணம்
தொடர்ந்தார்.
அதிர்ச்சியில் இருந்த
அனைவரும்
அவர் திசை
பணிந்தார்கள்.
பிரம்மேந்திரரின்
அருளாற்றல்
அவர்களைத்
தொழச் செய்தது.
இன்னொரு
சம்பவம்
எதுவும்
உடல்
உணர்ச்சி அற்ற
மகானின்
உன்னத அற்புதம்
சொல்லும் நிகழ்வு.
ஒருமுறை
ஆண் பெண் பேதம்
உடை உணர்வு
என ஏதுமற்ற
பிரம்மேந்திரர்
நடந்து சென்று
கொண்டிருந்தார்.
திருச்சிப் பக்கம்
ஓர் அந்தப்புரம்.
அதுவும்
ஓர்
இஸ்லாமிய
சிற்றரசரின்
அந்தப்புரம்.
பிரம்மேந்திரர்
பாட்டுக்கு
நிர்வாண நிலையில்
சென்று
கொண்டிருந்தார்.
கோஷா
பெண்களின்
கூக்குரல்
அரசவையிலிருந்த
மன்னன்
செவிகளை
அறைந்தது.
பதறிய படி
ஓடி வந்த
மன்னன்
கொடுவாளினை
எடுத்தான்.
ஒரு
பித்தனைப்
போல
நடை போட்டுக்
கொண்டிருந்த
பிரம்மேந்திரரை
நெருங்கினான்.
அவர்
வழக்கம்போல்
ஏதும் அறியாதவராய்
ஏகாந்தமாய்
சென்று கொண்டிருந்தார்.
அரசனின் கோபம்
அதிகரித்தது.
அனிச்சையாய்
வீசினான்
கூர் வாளினை.
அந்தோ!
அம்மண சாமியாரின்
தோள்பட்டையில்
விழுந்த வீச்சு
கையொன்றைத்
தகர்த்து
தரையில் வீசி
எறிந்தது.
இரத்தம்
கொப்பளித்து
சுற்றுச் சூழலைச்
சிவப்பாக்கியது.
இத்தனை
களேபரம் நடந்தும்
எதுவும்
நடக்காதது போல
பிரம்மேந்திரர்
நடந்து கொண்டிருந்தார்.
'என்னடா!
இது சோதனை'
மன்னன்
திகைத்தான்.
சிந்தித்தான்.
பயந்தான்.
'இவர்
வெறும்
சாமியாரில்லை.
மகத்துவமிக்கவர்.
மதங்களைத் தாண்டி
மன்னன் மனம்
எச்சரித்தது.
சித்தன் போக்கென
சென்று கொண்டிருந்த
பிரம்மேந்திரர்
முன் ஓடி
நின்றான்.
மேற்கொண்டு
செல்வதைத்
தடுத்தான்.
அப்போது தான்
சுற்றும் முற்றும்
பார்த்த
திகம்பரர்
நடந்ததை
யூகித்தார்.
'அய்யகோ..
மன்னியுங்கள் சுவாமி'
தரையில்
விழுந்த
கையை எடுத்து
பிரம்மேந்திரரிடம்
ஒப்படைத்தான்.
பதட்டமும்
பரபரப்பும்
நடுநடுங்க வைக்க
தவித்தபடி
நின்றிருந்தான்.
வெட்டிய கையை
வாங்கிய
பிரம்மேந்திரர்
தோள் பட்டையின்
மீது
வைத்தார்.
ஒட்டிக் கொண்டது
அக்கை.
பீறிட்ட இரத்தம்
ஒரு துளி கூட
இல்லாமல்
மறைந்து போனது.
சில நொடிகள் . . .
சிறிது நடந்தவர்
பின்
மறைந்து போனார்.
முஸ்லீம்
மன்னன்
மகானின்
தெய்வீகம் புரிந்து
நீண்ட நேரம்
தொழுதபடி
இருந்தான்.
அதைத் தொடர்ந்து
அரண்மனையும்
அந்தப்புறமும்
பிரம்மேந்திரரின்
புகழ் பாடின
பல காலம்.
இன்னொரு
சொற்றொடர் கூட
சதாசிவரின்
வாழ்க்கையை
திசை திருப்பியது.
அது
தொடர்பான
கதை
ஒரு
கர்ண பரம்பரைக்
கதை.
எங்கோ
ஒரு
திறந்த வெளியில்
பிரம்மேந்திரர்
படுத்திருந்தார்.
தலைக்கு
ஏதுவாக
மண் குவித்து
தலை சாய்ந்திருந்தார்.
அப்போது
வந்த
கிராமத்து மக்கள்
'முற்றும்
துறந்தவருக்கு
தலையணை
பாரு'
கேலி செய்த படி
சென்று விட்டனர்.
'என்ன இது?
வம்பா
போச்சு'
என
நினைத்தாரோ
என்னவோ
மறுநாள்
மணல் குவிக்காமல்
தரை
சாய்ந்திருந்தார்.
அப்போதும்
ஒரு
விமர்சனம்
வந்தது.
'நாம்
நேற்று
சொன்னதைக்
கேட்டு
சாமிக்கு
கோபம்
வந்து விட்டது
பாரு...'
வேத சித்தாந்த
யோக ஞானிக்கு
அதிர்ச்சி.
குருகுலக்
குருவாய் இருந்த
ஸ்ரீதரவெங்கடேசரிடம்
விளக்கம்
கேட்டார் பிரம்மேந்திரர்.
'அகந்தையை விடு'
அற்புதமாய்ச் சொன்னார்.
'பிறர் சொல்லுக்கு
செவி கொடுக்காதே!
கோபம் தவிர்.'
இது பிரம்மேந்திரருக்கு
கிடைத்த
உபதேசச் சொற்கள்.
அதன் பின்
அவர் வாழ்வே
முற்றிலுமாய்
குறையொன்றும்
இல்லாமல்
இறையொற்றியே
இருந்தது.
அற்புதங்கள்
அதி அற்புதங்களாய்த்
தொடர்ந்தன.
இப்படித் தான்
ஒருமுறை ...
பிரம்மேந்திரர்
புதுக்கோட்டைப் பக்கம்
ஏதோ
ஒரு பாதையில்
சென்று
கொண்டிருந்தார்.
நேரம்
நள்ளிரவு.
வழியில்
ஒரு
நெற்குவியல்
அருகில்
வைக்கோல் போர்.
என்ன நினைத்தாரோ
அதனருகில்
சென்றார்
பிரம்மேந்திரர்.
வைக்கோல்
போரின்
இடையே
உட்கார்ந்து
நிஷ்டையில்
ஆழ்ந்தார்.
அடுத்தடுத்து
வைக்கோல் போர்
ஒன்றன் மீது
ஒன்றாய்
சுமையேற்ற
அடியிலே
ஆட்பட்டார்
அருளாளர்.
பிறகு
பல மாதம் கழித்து
வைக்கோல் போர்
வேறிடம்
கொண்டு செல்ல
எடுக்கப்பட்ட போது
உடையின்றி
உணர்வின்றி
உட்கார்ந்திருந்த
பிரம்மேந்திரரைப்
பார்த்தவர்கள்
பிரமித்தார்கள்.
எத்தனை காலம்
இப்படி
ஊண்
உறக்கம்
உணர்வு
ஏதுமின்றி
தவத்தில் இருந்தாரோ!
ஆனால்
அங்கிருந்தோர்
‘திருடன்’
என நினைத்து
நெருங்கி வந்து
அடித்துத் தாக்கக்
கைகளை ஓங்கினர்.
ஓங்கிய கைகள்
ஓங்கிய படியே
அப்படியே நின்றன.
கீழிறக்க
முடியவில்லை.
பிரம்மேந்திரர்
அப்படியே
நின்றுவிட்டார்.
நிலக்கிழார்
விரைந்து
வந்து
தன் ஆட்கள்
கல்தூண் போல்
நிற்பது கண்டு
அருகிலே ஓர்
அவதூதரும்
நிற்பது
கண்டு
நடந்ததைப்
புரிந்தார்.
சதாசிவனாரின்
கால்களில்
விழுந்தார்.
மன்னிக்க
வேண்டினார்.
நிர்வாண
பிரம்மேந்திரர்
முகக் குறிப்பு
ஏதும் காட்டாமல்
அவ்விடம்
அகன்றார்.
அவர்
விலக விலக
காவலர்களின்
கரங்கள்
அதிசயம் போல்
கீழிறங்கின.
செயல்பட்டன.
காவலர்களும்
மற்றவர்களும்
பிரம்மேந்திரர்
சென்ற
திசை நோக்கி
தரை பணிந்து
வணங்கினர்.
பின்னொரு
முறை...
ஓம் நமசிவாய!
(பாகம் - 4 -தொடரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக