விறன்மிண்ட நாயனார் புராணம் (பாகம் -2) - மாரிமைந்தன் சிவராமன்

விறன்மிண்ட நாயனார் புராணம் (பாகம் -2) சிவனையே கண்டித்த சிவனடியார் ஆழ்ந்து சிந்தித்தால் ஓர் உண்மை தெரியவரும். விறன் மிண்டர் தான் திருத்தொண்டர் தொகை சுந்தரரால் அருளப்படுவதற்கும் அதை ஒட்டி சேக்கிழார் பெரியபுராணம் படைப்பதற்கும் காரணகர்த்தா. விறன் மிண்டர் கோபக் குரல் எழுப்பி இராது இருந்திருந்தால் அடியார்கள் வரலாறு கிடைத்திருக்காது. இது அருளாளன் அருளிய விளையாட்டு. விறன்மிண்ட நாயனாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் கூத்தபிரான் நடத்திய நாடகத்தின் இருதுருவ நாயகர்கள். 'திருத்தொண்டர் தொகை' இயற்றி முடித்த பின்னர் திருவாரூர் கோயிலின் வடக்கு வாசலில் காட்சியளித்து விறன் மிண்டரின் சமகாலத்து அடியாரான சுந்தரமூர்த்தியாரின் கரம் பற்றி கரை சேர்த்துக் கொண்டார் அருள் நிறை ஆதிமூர்த்தி. சுந்தரமூர்த்தி நாயனார் அருள் பயணம் இவ்வாறிருக்க சிவன் மீதே சினம் கொண்ட விறன் மிண்டர் என்னவானார் என்று பார்ப்போமா ? சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோயிலில் தியாகேசுவரத் தேவரின் ...