சோமாசி மாற நாயனார் புராணம்

63 நாயன்மார்கள் வரலாறு சோமாசி மாற நாயனார் புராணம் மாரி மைந்தன் சிவராமன் சோழவள நாட்டில் மாஞ்சோலைகள் நிறைந்த புனித தலம் திருவம்பர். இவ்வூரில் காட்டுமலை மேல் ஒரு திருக்கோயில். இக்கோயிலில் சிவலிங்கத்திற்குப் பின்புறம் அம்மையப்பர் திரு உருவம். இறையைப் பார்ப்பதற்கே ஏகாந்தமாய் இருக்கும். தரிசிப்பதற்குச் சொல்லவே வேண்டாம். இறையாசி பெறுவதற்கு இணையற்ற கோயில். 'அம்பர்திருப் பெருங்கோயில் அமர்கின் றான்காண் ' என்கிறது தேவாரம். ஆம்.... பாடல் பெற்ற திருத்தலம் மாகாளம் பெருங்கோயில். கோசெங்கட் என்னும் சோழ மன்னன் மாடக்கோயில்கள் கட்டுவதில் பேரார்வம் கொண்டவன். எழுபது மாடக்கோயில்கள் கட்டியுள்ளான். முதலில் கட்டியது திருவானைக்கா கோயில். முடிவாகக் கட்டியதுதான் அம்பர் பெருந்திருக்கோயில். ஊர் சிறப்பும் கோயிற் பெருமையும் ஒருங்கே கொண்ட திருவம்பரில் ஒரு சிவபக்தர். அந்தணர் குலம். பெயர் சோமாசியார். ஒரு சிவபக்தர் நாயன்மாராக பக்தி உயர்வு பெற முடியும் என்பதற்கு உதாரண பு...